Published : 29 Feb 2020 05:15 PM
Last Updated : 29 Feb 2020 05:15 PM

அமெரிக்கப் பொருளாதாரமும் கறுப்பினத்தவர்களின் நிலையும் - ஒரு பார்வை

அமெரிக்கப் பொருளாதாரம் எப்போதுமே அங்குள்ள வெள்ளை இனத்தவருக்கு பெரிய முன்னேற்றத்தை வழங்கி வருகிறது, மாறாக கறுப்பினத்தவர்களின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் உள்ளது.

அமெரிக்க தேசிய இன மறுமுதலீட்டு கூட்டணிக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்யும்.

அமெரிக்காவில் இன்று சுமார் 5 கோடி ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர்கள் உள்ளனர். இவர்களது மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் அமெரிக்க செல்வத்தில் இவர்களுக்கு வரும் பங்கைப் பார்த்தால் அதிர்ச்சியே மிஞ்சும், இவர்கள் அடிப்படை வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படுபவர்களாக இருக்கிறார்கள்.

2018 நிலவரங்கள் படி ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வருவாய் 41,000 டாலர்களாக இருந்தது, இது முந்தைய நிலையைக் காட்டிலும் சற்றே மேம்பட்ட நிலை என்றாலும் தேசிய சராசரியான 62,000 டாலர்களை ஒப்பிடும்போது மிகக் குறைவு. மேலும் வெள்ளையர்களின் ஆண்டு சராசரி 70,000 டாலர்கள். கருப்பினத்தவருகும் வெள்ளை இனத்தவருக்கும் இடையே உள்ள பொருளாதார இடைவெளி புரிகிறதா?

அதே போல் கருப்பரினத்தவரிடையே வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் 6.5% ஆகக் குறைந்தாலும் தேசிய மட்டத்தில் ஒட்டுமொத்தமாக 3.9% வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒப்பிடும் போது அதிகமே. பூர்வக்குடி அமெரிக்கர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் 6.6% ஆகும்.

ஆனால் கல்வியைப் பொறுத்த மட்டில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் நிலை சற்றே உயர்ந்துள்ளது, 2010-ல் 67% ஆக இருந்தது 2017-வாக்கில் 78% ஆக அதிகரித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் கருப்பர்கள் பெறும் பட்டப்படிப்பு விகிதம் 17%லிருந்து 22%க்கு அருகில் உள்ளது. ஆனால் வெள்ளை இன அமெரிக்கர்களை ஒப்பிடும் போது இது மிகமிகக் குறைவான நிலையே.

வருவாய், வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவை பொருளாதார வாழ்நலனுக்கு உகந்தவை என்றாலும் சொத்து மதிப்பு என்ற அளவில் வெள்ளையர்களுக்கும் கருப்பரினத்தவருக்கும் மிகப்பெரிய இடைவெளி இருந்து வருகிறது. வெள்ளை இனத்தவர்களின் மொத்த நிகர சொத்து மதிப்பு 1,47,000 டாலர்கள் எனும்போது கருப்பரினத்தவரின் நிகர சொத்து மதிப்பு 3,600 டாலர்களே. அதாவது அமெரிக்க வெள்ளை இனப்பிரிவினரின் சொத்து மதிப்பு கருப்பரின சொத்து மதிப்பை விட 41 மடங்கு அதிகம்.

21ம் நூற்றாண்டை நெருங்கி விட்ட நிலையிலும் 18ம் நூற்றாண்டு பிரெஞ்சுப் புரட்சியின் மகாவாக்கியமான சமத்துவம், சம உரிமை என்பது கருப்பர்களைப் பொருத்தவரை தொலைதூரக் கனவாகவே உள்ளது. குறிப்பாக பொருளாதாரம், சொத்து, செல்வம் ஆகியவற்றில் கருப்பர்களின் நிலை இன்னும் மோசமாகவே இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. கருப்பரின வரலாற்றைப் பார்க்கும்போது கடனும் வறுமையுமே அமெரிக்காவில் எஞ்சியுள்ளது.

அமெரிக்காவில் நிற ரீதியான பணக்காரர், ஏழை பிளவு பெரிய அளவில் இருந்து வருவது அதன் வேரடி வரலாற்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது. அடிமைகளை வியாபாரம் செய்து வந்த நாள் முதல் பிறகு பாகுபாடுக் காலக்கட்டம் தற்போது வாய்ப்புகளிலும் பாகுபாடு, ஒடுக்குதல் புறக்கணிப்புகள், புறந்தள்ளுதல் இன்னமும் அமெரிக்க சமூகத்தில் நீண்ட தொடர் கதையாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x