மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒடிசா கலைஞர் உருவாக்கிய மினியேச்சர் சிவலிங்கம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒடிசா கலைஞர் உருவாக்கிய மினியேச்சர் சிவலிங்கம்
Updated on
1 min read

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒடிசாவைச் சேர்ந்த கலைஞர் எல்.ஈஸ்வர் ராவ், பென்சில் முனையிலும், அளவில் மிக மிக சிறிய கல்லிலும் சிவலிங்கத்தைச் செதுக்கியுள்ளார். அவருடை இச்சிலைகள் காண்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது ஜட்னி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பிரபல நுண்சிற்பக் கலைஞர் (மினியேச்சர் ஆர்டிஸ்ட்) எல்.ஈஸ்வர் ராவ்.

இவர் மகா சிவராத்திரியை முன்னிட்டு பென்சில் முனையிலும், சிறு கல்லிலும் சிவலிங்கத்தைச் செதுக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்த நுண்சிற்பம் தெய்வீக அம்சம் நிறைந்ததாக அமைந்துள்ளது.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ராவ், "மகா சிவராத்திரி நாளை ஒட்டி கல்லி 0.5 இன்ச் அளவில் சிவலிங்கத்தைச் செதுக்கியுள்ளேன். இதை ஒரு சிறிய கண்ணாடி குடுவைக்குள் அடைத்துள்ளேன். இது மிகவும் நுட்பமான வேலையாகவும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது. அதேபோல் பென்சில் முனையில் 0.5 செ.மீ அளவில் ஒரு சிவலிங்கத்தை செதுக்கியுள்ளேன்" என்றார்.

ராவ் இதற்கு முன்னதாக உலகக் கோப்பை கிரிக்கெட் கேடயத்தை பென்சில் நுணியில் செதுக்கியிருக்கிறார். அதேபோல் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, ஒரு சிறு கண்ணாடி குடுவைக்குள் தேவாலயம் ஒன்றை செதுக்கியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in