Published : 22 Nov 2019 12:15 PM
Last Updated : 22 Nov 2019 12:15 PM

சமூக வலைதளங்களில் வைரலாகும் புகை மண்டிய நுரையீரல் வீடியோ: புகைஞர்களைத் திருத்துமா?

"புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும், Smoking is injurious to health" என சிகரெட் அட்டைகளில் இருக்கும் இந்த வாசகமும், புகை மண்டிய நுரையீரலின் படமும், புற்றுநோய் கட்டியின் படமும் ஒரு சம்பிரதாயத்துக்குகூட புகை பிடிப்பவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியாகத் தெரியவில்லை.

ஆனால், சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, உலகின் மிகச்சிறந்த புகை எதிர்ப்பு விளம்பரமாக எந்தக் காலத்திலும் பயன்படுத்தலாம் என்ற அளவுக்கு வீரியம் நிறைந்ததாக இருக்கிறது.

சீனாவைச் சேர்ந்த ஒருவர் தன் இறப்புக்குப் பின் தனது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க எழுதிக் கொடுத்திருந்தார். அதன்படி 52 வயதான அந்த நபரின் சடலம் மருத்துவமனையில் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அப்போது மருத்துவர்கள் நுரையீரலை மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளியில் எடுத்துள்ளனர். ஆனால் அந்தக் காட்சி மருத்துவர்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காரணம் அந்த நுரையீரல் மீது தார் ஊற்றியதுபோல் கருப்பு நிறத்தில் புகை மண்டியிருந்தது. அந்த நபர் 30 ஆண்டுகளாக புகை பிடித்துள்ளார். நல்ல நோக்கத்தோடு உடல் உறுப்பு தானத்துக்கு அவர் முன்வந்திருந்தாலும் வாழும் காலத்தில் நல்ல பழக்கம் இல்லாததால் அவரின் தானம் பயனற்றுப் போனது.

புகை மண்டிய நுரையீரல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதுவாவது புகைஞர்களைத் திருத்துமா? என்பதே இணையவாசிகள் பலரின் குரலாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x