

திருநெல்வேலி
திருநெல்வேலியில் தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவின்போது நடைபெற்ற கவிதை வேள்வியில் பங்கேற்ற 100 கவிஞர்கள் வாசித்திருந்த கவிதைகளின் தொகுப்பு நூலை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் வெளியிட்டார்.
தாமிரபரணி அந்த்ய புஷ்கர விழா சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருநெல்வேலி சங்கர்நகர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
கடந்த ஆண்டில் தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவின்போது தைப்பூச படித்துறை விழாக்குழு, கவிதை உறவு, நெல்லை மாவட்ட கவிஞர் பேரவை இணைந்து கவிஞர் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 100 கவிஞர்கள் பங்கேற்ற கவிதை வேள்வி நடத்தியிருந்தனர்.
செங்கோல் ஆதீனம், வேளாக் குறிச்சி ஆதீனம், பாலமுருகனடிமை, ஆகிய ஆதீனங்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த கவிதை வேள்வியில் வாசிக்கப்பட்ட 100 கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டிருக்கிறது.
இந்த தாமிரபரணி மகா புஷ்கர கவிதை நூலை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் வெளியிட்டார். முன்னாள் காவல் துறை தலைவர் மாசானமுத்து பெற்றுக்கொண்டார்.
பள்ளி முதல்வர் உஷாராமன், தாளாளர் நிர்மல் ராமரத்தினம், கவிதை உறவு அமைப்பின் பொறுப்பnளர்கள் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன், இளங்கோ, சு.முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.