செய்திப்பிரிவு

Published : 05 Aug 2019 16:39 pm

Updated : : 05 Aug 2019 16:39 pm

 

நீண்ட காலம் வெளியே இருந்தாலும் பவுலிங்கில் அவர் காட்டிய அமைதி: வாஷிங்டன் சுந்தர் குறித்து விராட் கோலி புகழாரம்

virat-kohli-hails-washington-sundar-s-composure

லாடர் ஹில்லில் நடைபெற்ற 2வது டி20 போட்டியிலும் மே.இ.தீவுகள் அணியை 22 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றியதையடுத்து வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கை பெரிய அளவில் கேப்டன் விராட் கோலி பாராட்டினார். 

முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணிக்கு மழை காரணமாக டக் வொர்த் முறையில் 15.3 ஓவர்களில் 121 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஆனால் மே.இ.தீவுகள் 98/4 என்று தோல்வி தழுவியது. வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்கள் வீசி 12 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் ஆட்டம் முடின்ஹ்டு விராட் கோலி கூறியதாவது:

உண்மையில் ஒரு துல்லியமான ஆட்டமாக அமைந்தது. முதல் பாதியில் பிட்ச் பேட்டிங்கிற்குச் சாதகமாக அமைந்தது. நல்ல அடிட்த்தளம் அமைத்ஹ்தோம் பிறகு நல்ல பினிஷிங்கில் 165 ரனக்ளை எட்டினோம். 2ம் பாதியில் பிட்ச் கடுமையாக மந்தமடைந்தது. 

முதல் 2 போட்டிகளில் வென்ற பிறகே அணியின் பிற வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வாய்ப்புகளை வழங்குகிறது, இப்படிக் கூறும்போது வெற்றி பெறுவதுதான் முதல் குறிக்கோள் என்பதில் மாற்றமில்லை. 

அடித்து ஆடும் பேட்ஸ்மென்களுக்கு எதிராக வாஷிங்டன் வீசிய விதம் அபாரம் அதுவும் நீண்ட காலம் வெளியிலிருந்து விட்டு அணிக்குள் வந்து அதிரடி வீரர்களுக்கு எதிராக அவர் காட்டிய பேரமைதி என்னை ஆச்சரியப்பட வைத்தது. இந்தத் தொடரில் அவர் ஒரு பெரிய தாக்கமாக இருப்பார். தான் இந்த கண்த்தில் செயல்படுத்த வேன்டியதை கச்சிதமாக செயல்படுத்தியுள்ளார். 


இவ்வாறு கூறினார் விராட் கோலி.

தொடரை வென்றது இந்தியாடி20இந்தியா-மே.இ.தீவுகள்கிரிக்கெட்வாஷிங்டன் சுந்தர்ரோஹித் சர்மாவிராட் கோலி
Popular Articles

You May Like

More From This Category

More From this Author