கனவை விதைக்கும் சொற்கள்

கனவை விதைக்கும் சொற்கள்
Updated on
1 min read

* மழைக் காலத்தில் எல்லாப் பறவைகளும் கூட்டைத் தேடி அடைகின்றன. கழுகுகளோ மேகங்களுக்கும் மேலே பறந்து மழையையே தவிர்த்துவிடுகின்றன. பிரச்சினைகள் பொதுவானவை, நம்முடைய அணுகுமுறைகள்தான் வித்தியாசத்தைக் காட்டுகின்றன.

* முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்காதீர்கள்; இரண்டாவது முயற்சியில் தோல்வியடைந்தால் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் விளைந்த குருட்டாம்போக்கான வெற்றி என்று விமர்சிப்பார்கள்.

* வாழ்க்கையில் இடர்ப்பாடுகள் அவசியம். ஏனென்றால், வெற்றி என்ற மகிழ்ச்சியை அனுபவிக்க அவை உதவியாக இருக்கும்.

* கனவு, கனவு, கனவு அவசியம். கனவுகள் எண்ணங்களாகும், எண்ணங்கள் செயல்களாக வடிவெடுக்கும்.

* அற்புதங்களை அகஸ்மாத்தாகச் செய்ய முடியாது. அடுத்தடுத்துச் செயல்பட்டுக்கொண்டே இருந்தால்தான் சாதிக்க முடியும்.

* வெற்றிக்கான விளக்கவுரை வலுவாக இருந்தால், தோல்வி எப்போதுமே நம்மை ஆட்கொள்ளாது.

* வித்தியாசமாகச் சிந்திக்க, புதியதைக் கண்டுபிடிக்க, இதுவரை பயணப்படாத பாதையில் பயணப்பட, இதுவரை சாதித்திராத சாதனைகளைச் செய்துமுடிக்க துணிச்சலைப் பெறுங்கள் என்பதே இளைஞர்களுக்கு என்னுடைய செய்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in