Published : 22 May 2014 12:00 AM
Last Updated : 22 May 2014 12:00 AM

யப்பா பைரவா!

கரிசல் இலக்கிய மன்னர் கி.ரா மூல மாக எனக்கு அறிமுகமான நண் பர் இளையராஜா. இவரது மூத்த சகோதரர் செந்தில் நாதன். இருவருமே திருப்பூரில் தனித் தனியே பிசினஸ் செய்பவர்கள். இருவருமே நல்ல வாசகர்கள்.சேலம் ஓமலூரைச் சேர்ந்தவர்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் காரணமாக தொடர்ந்த சிக்கலால் சமீபத்தில் செந்தில் நாதனுக்கு ஒரு பெரிய ஆபரேசன். அவர்கள் வீட் டுக்கு போயிருந்த போது செந்தில் நாதன் சொன்ன விஷயம் இது.

சில வருடங்களுக்கு முன் திருப்பூ ரில் ஓமலூர் சகோதரர்கள் அங்கேரிப்பாளை யத்தில் ஒரு அபார்ட்மெண்டில் குடியிருந்த போது அதே அபார்ட்மெண்டில் புலி சரவணன் டெய்சி தம்பதியர் குடியிருந் திருக்கிறார்கள். புலி சரவணனுக்கு டையிங் பிசினஸ்.

வார இறுதி நாட்களில் செந்தில் நாத னும் புலி சரவணனும் அபார்ட்மெண்ட் மொட்டை மாடியில் ரிலாக்ஸாக மதுவருந் திக் கொண்டிருந்தனர். அப்போது புலி சரவ ணன், “ நாளைக்கு உங்களுக்கு ஒரு சர்ப் ரைஸ் தரப்போகிறேன்” என்று சொல்லியவர் மறு நாள் ஒரு 20 வயது மதிக்கத்தக்க பையனை அழைத்துவந்தார்.

“இவர் தான் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ் ணன்! சாட்சாத் எஸ்.ராமகிருஷ்ணன்!” என்று அறிமுகப்படுத்தினார். செந்திலுக்கு புல்லரித்து செடியரித்து மரம் அரித்து விட்டது!

அப்போது தான் ஆனந்த விகடனில் ராம கிருஷ்ணன் முதல் தொடர் எழுதிக்கொண் டிருந்திருக்கிறார். அந்தத் தொடர் முடிய மூன்று வாரங்கள்தான் இருந்தது. இவ்வளவு சின்னப் பையனாக எஸ்.ராமகிருஷ்ணன் இருப்பார் என்று செந்தில் கற்பனை கூட செய்திருக்கவில்லை.

எஸ்.ரா இப்போது திருப்பூரில் புலி கணேச னிடம் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆகி றது. நான்காயிரம் சம்பளம். அந்தப் பையன், தான் ஆனந்த விகடனுக்கு நான்கு வாரம் முன்னதாகவே எப்போதும் எழுதி அனுப்பி விடுவதாகவும் பத்திரிக்கையிலிருந்து வாரம் ரூபாய் பத்தாயிரம் தனக்கு தருவார் கள் என்றும் சொல்லியிருக்கிறான்.

புலி கணேசன் புத்தகமோ, பத்தி ரிக்கையோ பார்ப்பவரல்ல. மிக இளம் எழுத்தாளர் தன்னுடைய கம்பெனியில் வேலை செய்கிறார் என்பதைப்பற்றி தெரிய வந்தவுடன் தன் நண்பர் செந்தில் நாதனுக்கு பூரிப்புடன் அறிமுகம் செய்திருக்கிறார்!

உடனே செந்தில் நாதன் அவரை ஃப்ளாட் டுக்கு அழைத்துச் சென்று தன் புத்தக கலெக்சனைக் காட்டியிருக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பு நாவலை இளம் எழுத்தாளர் படிக்கவில்லை என்றதும் மனமுவந்து அதை பரிசளித்திருக்கிறார்.

செந்தில் நாதன் ரொம்ப வெள்ளை உள்ளத்துடன் புலி கணேசனிடம் எஸ்.ரா வின் பெருமைகளை எடுத்துச் சொல்லி அவரை இன்னும் கௌரவமாக நடத்தச் சொல் லியிருக்கிறார். உடனே புலி சரவணன் இந்த பையனின் சம்பளத்தை ஆறாயிரமாக உயர்த்தி விட்டார். எஸ்.ரா வுக்கு கம்பெனிக்கு வரவேண்டிய செக், பணம் கலக்சன் மட்டும் பார்த்தால் போதும் என்று சலுகை. அந்தப்பையன் அடுத்த வாரம் “ நான் விகடனில் ட்ரை யினில் மானபங்கப்படுத்தப்பட்டு ரேப் செய்யப்பட்ட வட நாட்டுப் பெண் பற்றி எழுதியதைப் படித்து விட்டீர்களா? ” என்று கேட்டிருக்கிறான்.

“ஒரு குறிப்பிட்ட வகை சிலந்தி பற்றி நான் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். அந்த சிலந்தி ஒரு மனிதனை கடித்தால் குறிப் பிட்ட சில வியாதிகள் குணமாகின்றன என்ற என் கண்டு பிடிப்பைப் பற்றி டிஸ்கஸ் செய்வதற்காக அமெரிக்காவில் ‘நாசா’ விலிருந்து அழைத்திருக்கிறார்கள்!” என்று செந்தில் நாதனிடம் ஒரு நாள் கேஷுவலாக சொல்லி விட்டான்.

ஆ! ஆ! ஆ! எஸ். ரா எழுத்தாளர் என்பது தெரிந்ததே. அவர் சின்ன பையன் என்பதும் தெரிந்ததே. எளிமையாக நம் நண்பர் புலியிடம் வேலை பார்க்கிறார் என்பதும் தெரிந்ததே. ஆனால் அவர் இன்று ‘நாசா’ போற்றும் விஞ்ஞானியும் கூட என்பதுதான் தெரியாததே!!!

மூன்றே வாரத்தில் எஸ்.ரா வின் தொடர் ஆனந்த விகடனில் முடிவுக்கு வந்த போது எஸ்.ராமகிருஷ்ணனின் புகைப்படம் அதில் அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்த செந்தில் நாதனுக்கு அதிர்ச்சி. புலி சரவண னிடம் வேலை பார்த்த ஆளுக்கு பதி லாக யாரோ ஒருவருடைய படம் வெளியிடப் பட்டிருந்தது.. சில நிமிடங்கள் குழப்பம். செந்தில் மூளையில் பனி மூட்டம். பனி விலகியதுமே அச்சில் வந்திருந்த அந்த யாரோ ஒருவர் தான் உண்மையான எஸ். ராமகிருஷ்ணன் என்பது உறைத்தது!

உடனே அந்த ஆனந்த விகடனுடன் புலியின் ஃபேக்டரிக்கு புயலாய் கிளம்பிப் போனால் பால் பருவ எழுத்தாளரை அங்கே வேலை பார்ப்பவர்கள் கும்மிக் கொண்டிருந்திருக்கிறார்கள். கலக் ஷனில் செக்குகளை மட்டும் ஒப்படைத்த அந்த எழுத்தாளன் கேஷ் எல்லாவற்றையும் அமுக்கிய விஷயம் வெளி வந்து விட்டதால் மண்டகப்படி. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி விட்டார் செந்தில் நாதன். ஆனந்த விகடனை த் தூக்கிப்போட்டு விட்டார். எரி கிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றி விட்டாரேயம்மா…

யப்பா பைரவா! நீ யாரு பெத்த பிள்ளயோ!

எழுத்தாளர் இப்படி அயோக்கியத்தனம் செய்து விட்டாரே என்ற அதிர்ச்சியில் இருந்த புலி கணேசனுக்கு அவர் எழுத் தாளரே அல்ல என்று தெரிந்தபோது பேரதிர்ச்சி. இப்போது முதலாளியே அந்த ஃப்ராடை அடிக்க ஆரம்பித்து விட்டார். உடனே வேலை பார்ப்பவர்களின் தர்ம அடி பலமாகி விட்டது. மூன்று வாரத்தில் கிட்டத்தட்ட முப்பதாயிரம் கையாடல் செய்த அந்த ஃப்ராடிடம் இருந்து ஒரு பைசா கூட ரிகவர் செய்ய முடியவில்லையா?

அவன் யார்? எந்த ஊர்?

அவனுக்கு புலி கொடுத்திருந்த பைக்கை மட்டும் ரிகவர் செய்து விட்டு விரட்டியிருக்கி றார்கள்.

ஆர்.பி.ராஜநாயஹம்- http://rprajanayahem.blogspot.in/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x