Published : 15 Jun 2015 06:19 PM
Last Updated : 15 Jun 2015 06:19 PM

ட்வீட்டாம்லேட்: சர்ச்சைக்குள்ளாகிய சுஷ்மா ஸ்வராஜின் மனிதாபிமான விசா அணுகுமுறை

ஊழல் புகாரில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, இங்கிலாந்து அரசு விசா வழங்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பரிந்துரை செய்ததாக விவரிக்கும் இ-மெயில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஊழல் விவகாரத்தில் தேடப்படும் குற்றவாளிக்கு உதவியிருப்பது மனிதாபிமான அடிப்படையில் தான் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா தெரிவித்திருப்பது கடுமையாக விமர்சனத்துக்குள்ளாகியது.

இதனால் அவரது கருத்துக்கு எதிராக ட்விட்டர்வாசிகள் எழுந்தனர். வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு எதிராக #SushmaSwaraj issue, #Sushmalalitmodirow, #SushmaResign என பல்வேறு ஹேஷ்டேகுகளில் அவருக்கு எதிரான கருத்துகள் ஓங்கி ஒலிக்கின்றன. அதே நேரத்தில் அவருக்கு ஆதரவான கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில இன்றைய ட்வீட்டாம்லேட்டில்....

ஊர் சுற்றி ‏@NamVoice - சுஷ்மா, பிரதமர் ரேஸ்ல இருந்தவர். மோடிக்கும் ஆகாத கை. அந்த மோடி விவகாரத்தை சாக்கா வச்சு கழட்டி விட்டாலும் விடலாம்.

நரக நாகரிகன் ‏@ilvsoffya - சுஷ்மா எனக்கும் இந்த மாதிரி மனிதாபிமான அடிப்படையில உதவி பண்ணிங்கனா, கோடான கோடி வருஷத்துக்கும் நன்றி செலுத்துவேன்.

மேதாவி ‏@Vaetan - லலித் மோடிக்கு மனிதாபிமானம் காரணமாகவே உதவி செய்தேன்! -சுஷ்மா சுவராஜ்! #பெயர் காரணமாகன்னு சொன்னாலாவது எதாவது பிரயோசனம் கிடைக்கும்!

raj_tuty ‏@i_rajtuty - சுஷ்மா சுவராஜ், ஃபாரின் மினிஸ்டர் பதவியை ராஜினாமா செய்யனுமா வேண்டாமா என்பதைவிட இந்தியாவுக்கு ஃபாரின் மினிஸ்டர் தேவையா? என்பதை விவாதிக்கலாம்!

vignesh ‏@vignesh_madurai - லலித் மோடிக்கு சுஷ்மா உதவிய விவகாரம்- மோடியும் இப்படி தான் விசா வாங்குகிறாரா?

Yousuf Riaz ‏@YousufRiaz1 - லலித் மோடி மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்கு போர்சுக்கல் சென்று வர உதவி செய்தது மனிதாபிமான அடிப்படையில்தான் என்கிறார் சுஸ்மா ஸ்வராஜ். அப்போ, பிரபாகரன் தாய் பார்வதி அம்மாவை................ வயது முதிர்ந்த மூதாட்டி சிகிச்சைக்கு இந்தியா வந்த போது கருணை காட்டாமல் இந்திய அரசு திருப்பிய அனுப்பியது எந்த வகையில் நியாயம்...?

அன்புடன் நீலன் ‏@WriterNiilan - நம்பிட்டோம் நம்பிட்டோமுங்கிறேன் ...!

அபிஸ் செல்வம் ‏@abiseselva - சுஷ்மா விவகாரம் ரொம்ப சூடா இருக்கும் போல..

Raja hussain ‏@rajahussain83 - லலித் மோடிக்கு ஏன் உதவி செஞ்சீங்க? சுஷ்மா: நான் நரேந்திர மோடினு நெனச்சு கன்ஃபுயூஸ் ஆகிட்டேன் (மைண்ட் வாய்ஸ்).

RAJA ‏@rajarajan1969 - ”மோடிக்கு விசா வேணும்னு கேட்டாங்க, நானும் அவருக்கில்லாத விசாவான்னு தாராளமா கொடுங்கன்னுட்டேன், அப்புறமாத்தான் சொல்றாய்ங்க அது நரேந்திர மோடிக்கில்ல லலித் மோடிக்குன்னு”

மா மல்லன் ‏@rameshveluteja - உங்களுக்கு இந்த மனிதாபிமானம்லாம் தமிழக மீனவர்கள் மீது வராதே?

Jatin Patil ‏@jatinvijaypatil - பாசிடிவான விஷயங்களை பேசுவோமே. சுஷ்மா இதுவரை பல நல்ல பணிகளை நாட்டு மக்களுக்காக செய்திருக்கிறார். I respect you @SushmaSwaraj #stopblaming #SushmaSwaraj

Bitter Truth ‏@ANSHUL1002 - Best way to avoid #SushmaSwaraj issue . டிவி ஸ்விட்சை ஆஃப் செய்யவும். செய்தி நிறுவனங்களால் தான் இந்த கூச்சலே.

ஃபேஸ்புக்கிலிருந்து

வால் பையன் - மனிதாபிமானம்னா என்ன? ஊழல் பண்ணி கொள்ளை அடிச்சவங்களுக்கு ஹெல்ப் பண்றது. ‪#‎லலித்மோடி‬ ‪#‎சுஸ்மா‬

Akila Ramakrishnan - இந்திய அரசின் மனிதாபிமான உதவி கிடைக்க.. தமிழக மீனவர்கள் அனைவரும் ‪#‎லலித்மோடி‬ என்று பெயர் வைத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. இவன்: லலித் மோடி no.1

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x