Last Updated : 09 Jun, 2015 05:23 PM

 

Published : 09 Jun 2015 05:23 PM
Last Updated : 09 Jun 2015 05:23 PM

ட்வீட்டாம்லேட்: சூரிய வணக்கமும் சில சுளீர் பதிவுகளும்

சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21- ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. ஐ.நா.வின் அறிவிப்பின்பேரில் இந்த தினத்தை முன்னெடுக்கும் நிகழ்ச்சியை இந்தியா தலைமையேற்கிறது.

இதனிடையே யோகா தினத்தில் செய்யும் ஆசனங்களில் 'சூரிய வணக்கம்' செய்யப்படுமென்றும், அனைத்து பள்ளிகளிலும் அதனை கட்டாயமாக்கப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் தகவல் வெளியானது. இதற்கு, அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சூரிய வணக்கம் செய்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்று இஸ்லாமிய அமைப்புகள் போர்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதனால் யோகா தினம், சூரிய வணக்கம், சூரிய நமஸ்காரம், International Day of Yoga, Surya Namaskar என்று பல ஹேஷ்டேகுகளை பயன்படுத்தி யோகா தினத்துக்கு ஆதரவையும் எதிர்ப்பையும் பதிவு செய்கின்றனர். சர்வதேச அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ள சூரிய வணக்க சர்ச்சை குறித்த கருத்துக்கள் இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...

மு.நிஜாம் தீன் ‏@nizamdheen10 - இறைவன் படைத்தவற்றை,அவனுக்கு இணை வைக்கும் நிகழ்வுகளில் அனைத்து மதத்தினரையும் ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்#சூரிய நமஸ்காரம்

உளறுவாயர்!! ‏@Ularuvaayan - சைனஸ் பிரச்சனை இருந்தா, ரன்னிங்/ஜாகிங்/யோகா பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. இவை சுவாசத்தை சீராக்குவதால், தலைவலி பிரச்சனை குறையும்!

கவிதா ‏@kavitha129 - பள்ளியில் யோகா வரலாம், மதம்தான் வரக்கூடாது.

Sen ‏@Sen_Tamilan - லெஸ் #டென்ஷன் மோர் வொர்க்! மோர் #வொர்க் லெஸ் டென்ஷன்! #மோடி @ #யோகா!

RSS Ideology ‏@Fans_Bharat - முதலில் போலியோ சொட்டு மருந்து போடுவதை முஸ்லிம் சமூதாயத்துக்கு எதிரானது என்றீர்கள். இப்போது சூரிய நமஸ்காரமா? யாருக்கு தெரியும் நாளைக்கு சூரியன் மீது கூட ஃபத்வா விதிப்பீர்கள்.

Abhra Sarkar ‏@SrkrAbs - யோகாவுக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பில்லை என்றால் எதற்கு 'ஓம்' என்று அதில் திணிக்கிறீர்கள்?

KS ‏@kritish2007 - சூரிய வணக்கம் பிடிக்காதவர்கள் ஆர்டிக் கடலுக்குள் போங்க (அங்கதான் சூரியன் உதிக்காதாம்)

✍ ✍ ரைட்டர் ரவுடி ✍✍ ‏@Writer_Rowdy - சூரிய நமஸ்காரம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள்,நாட்டை விட்டு வெளியேறலாம் எம்.பி. யோகி. அதான் மோடி நாட்டைவிட்டு அடிக்கடி போறாரு போல

பயங்கர கோபக்காரன் ‏@SDRajkumar - இனி நாம இந்தியன்னு நிரூபிக்க ஆதார் தேவையில்லை.சூரிய நமஸ்காரம் போதும். ஆபிஸ்ல யாராவது எந்த நாடுனு கேட்டா சூரிய நமஸ்காரம் செஞ்சு காட்டுங்க

mr.tweets ‏@dhakshnamoort19 - யோகா எந்த மதத்தையும் சார்ந்து அல்ல. யோகா எல்லாரும் பயில வேண்டிய கலை.

ரயில்பயணி ‏@prasanna_tweets - எனக்கு தெரிஞ்ச ஒரே யோகா மல்லாக்க படுத்துட்டு தூங்குறது.#YogaDay

கோவை கமல் ‏@KOVAI_KAMAL - விருப்பமில்லாதவர்களுக்கு 'யோகா' திணிக்கப்பட வேண்டாமே! சூர்யவணக்கம், ஓம் தவிர்த்து மற்ற யோகமுறைகள் செய்யலாமே!

ட்விட்டர் தாத்தா ‏@PeriyaStar - மக்கள் வேலை கேட்டால் யோகா பற்றி பேசுகிறாரே மோடி: ராகுல் தாக்கு. # நீ டிகிரி முடிச்சியா மேன்!?? டீ பார் ஆனவன்னு சொன்னாய்ங்க...

காட்டுப்பயல் ‏@sundartsp - இனி யோகா கத்து குடுக்கிற மோடி தான் சீனர்களுக்கு அடுத்த மோடிதர்மர்

Yousuf Riaz ‏@YousufRiaz1 - மனித உடலைக் கட்டமைக்கும் கம்பிகளாக விளங்கும் எலும்புகளின் வலிமைக்கு வைட்டமின் டி, இந்த வைட்டமினின் 90 சதவிகித அளவு சூரிய ஒளியிலிருந்தே கிடைக்கிறது என்பது மாற்று கருத்து இல்லை. அதனால் சூரியனை கடவுளாக்கி எல்லாம் வழிபடுவது இஸ்லாத்தில் இல்லை. பூமியை போல் அது ஒரு கிரகம். இறைவன் படைப்பு ஆனால் அதுல்லாம் 'கடவுள், கண்டிப்பாக வணங்க வேண்டும்' என்று திணித்தால் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x