Published : 21 May 2015 09:17 AM
Last Updated : 21 May 2015 09:17 AM

இணைய களம்: ஆர்.கே. நகர்... ஆர்.குமாரசாமி நகர்தானே?

பேயோன்: முதலில் ‘நமோ' என்று பெயரைச் சுருக்கிக் கொஞ்சுவதை நிறுத்துங்கள். ஹிட்லரை ‘பப்லு' என்று அழைப்பதுபோல் இருக்கிறது.

லக்‌ஷ்மணன் சுப்ரமணியம்: ஆர்.கே. நகர் என்றால் ஆர். குமாரசாமி நகர்தானே?

‪#‎ டவுட்டு

ஆனந்த் சித்தன் குமார்: புட்டு 8 ரூவாயாம்... கடலைக்கறி 30 ரூவாயாம். வெறும் புட்டு தின்னா விக்கிக்கும்னு எவ்வளவு ட்ரிக்ஸா ரேட்டு வைக்கிறாங்கய்யா!

நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்: 5 ஆண்டுகளில் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பிரதமர் செல்ல வேண்டும் என்பது எனது ஆசை : பொன்.ராதாகிருஷ்ணன்

# வரும்போது பாரின் சாக்லேட்டும் பாடி ஸ்ப்ரேவும் வாங்கிட்டு வரேன்னு சொல்லிருப்பாரு போல!

ராஜேஷ்குமார் வீரசேகர்: தவறுதலாக மணமகளுக்குத் தாலி கட்ட முயன்ற சு.சுவாமி...

# இது அவரது சொந்த முயற்சி.

இதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை - தமிழிசை.

என்ஃபீல்டர்: ஆற்காட்டாருக்கு மன்னிப்பு போஸ்டர் அடிச்ச சமூகம், இப்போ மன்மோகன் சிங் கிட்ட மண்டிபோட்டு மன்னிப்பு கேக்கும் போலிருக்கு...

ஆனந்த் சித்தன் குமார்: திமுக, அதிமுகவை எங்கள் கூட்டணியில் இணைக்க மாட்டோம். தனித்தே போட்டி… சீமான்…

‪#‎ இத்துடன் சிரிப்பொலிச் செய்திகள் நிறைவடைந்தன.

ரியாஸ் குரானா: வாழ்க்கையைவிடப் பெரிய தண்டனை என்ன இருக்கிறது?

மனுஷ்யபுத்திரன்: மங்கோலிய நாடாளுமன்றத்தில் மோடி உரை.

எப்பங்க இந்திய நாடாளுமன்றத்துக்கு வந்து உரையாற்றுவீங்க...?

விமலாதித்த மாமல்லன்: திமுகதான் அஇஅதிமுகவுக்கு நிஜமான மாற்று - கனிமொழி

# எஸ் மேம்! அவுங்குளுது 65... உங்குளுது 200 .

நன்னாரி நாராயணன்: என்னதான் சீனா டிரெஸ், மங்கோலியா டிரெஸ் போட்டாலும் மண்ட மேல இருக்குற கொண்டையை மறைக்க முடியல பாருங்க!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x