Last Updated : 18 May, 2015 05:38 PM

 

Published : 18 May 2015 05:38 PM
Last Updated : 18 May 2015 05:38 PM

ட்வீட்டாம்லேட்: 36 வயதினிலே, புறம்போக்கு & சில குறிப்புகள்!

இந்த வார இறுதிக்கு தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு இரு வேறு சிறப்பு விருந்துகளாக அமைந்திருக்கிறது 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை'யும், '36 வயதினிலே'யும். நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இவ்விரு படங்கள் குறித்த பதிவுகள் இன்றைய் ட்வீட்டாம்லேட்டில்..

Karthik Selvam ‏@KarthiSOfficial - பாரதிராஜாவுக்கு 16 வயதினிலே; ஜோதிகாவுக்கு 36 வயதினிலே.

யாழினி அப்பா ‏@thangavasanth - ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல படம். # 36 வயதினிலே. பெண்களே கொண்டாடுங்கள்.

CHITRA KRISHNAN ‏@janaki89 - "36 வயதினிலே" பார்த்தாச்சு.. ஜோதிகாவுக்கு மொழிக்கு பிறகு நடிப்பை வெளிப்படுத்த கிடைத்த அருமையான படம். நன்றாக இருக்கிறது.

பிரபாகர்-கற்றதுதமிழ் ‏@prabhakaran2424 - கணவன், குழந்தை, மாமியார், மாமனார், பணி, கோபம், பாசம் அனைத்தையும் உள்வாங்கி நடித்து தன் கடமையை சமூக பார்வையாக மாற்றிய ஜோவுக்கு ஜே... #36 வயதினிலே அழகு.. அருமை..

RevathyR ‏@revathy_rr - சாதனை என்பது யாதெனில் தீவிர ஜோதிகா ஹேட்டரை 36 வயதினிலே முதல்நாள் ஷோவுக்கு கூட்டி வந்து உட்கார வைப்பது... #PeelingProud

யாழினி அப்பா ‏@thangavasanth - பொட்டப்புள்ள போக உலகம் பாதை போட்டு வைக்கும். முட்டுச்சந்து பாத்து அந்த ரோடு போயி நிக்கும். படங்காட்டும் ஏமாத்தி. #விவேகா #36 வயதினிலே

Jillu Nu Oru Thiru ‏@thiru143asha - முதல் முறை ஒருவரை பார்த்து மயங்கினேன் மனைவியானேன். 2- வது முறை மயங்கினேன் தாயானேன். மயக்கம் எல்லோருக்கும் உண்டு.......#36_வயதினிலே

Prem Shankar Colombo, Sri Lanka - 36 வயதினிலே, ஒரு பெண்ணின் கனவுகளை கல்யாணம் எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பதை மையமாக வைத்து எடுக்கப்படுள்ள அருமையான ஒரு திரைப்படம். பெண்ணியத்தை ஒரு அளவோடு கூறினால்தான் எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை இயக்குனர் நன்றே புரிந்து வைத்துள்ளார். ஜோதிகாவின் நடிப்பை பற்றி சொல்லவே தேவை இல்லை. தியேட்டருக்கு நம்பி போகலாம்

புறம்போக்குகுறித்த கருத்துக்கள்....

Santhanam ‏@santhanampr - கம்யூனிசம் பற்றி படிக்க தூண்டும் படம். #புறம்போக்கு #MustWatch

ஆயிரத்தில் ஒருவன் ‏@SriLiro - முக்கியமா அந்த ஜெயில் செட்!! தாறுமாறு.. யாருயா அந்த ஆர்ட் டைரக்டர்?! #புறம்போக்கு

Kailash Chandrasekar ‏@KailashCRJ - "எனக்கு வாழ ஆசை இருக்கு.. ஆனா அதை ஏன் நான் உங்ககிட்ட கேட்டு வாங்கணும்னு எதிர்பாக்கறிங்க" #புறம்போக்கு #இட்லிகம்யூனிஸ்ட்கள் கவனத்திற்கு

நட்புக்கு நான் அடிமை ‏@gopibca7 - கடலும் கடல் சார்ந்த இடமும்- இயற்கை, காடும் காடு சார்ந்த இடமும்- பேராண்மை, சிறையும் சிறை சார்ந்த இடமும்- புறம்போக்கு. S.P ஜெனநாதன் சூப்பர்.

Rajkumar (LARK) ‏@RomanticRaj - புறம்போக்கு என்கிற பொதுவுடமை. சில பல குறைகள் இருப்பினும் நல்ல படம். ஷியாம், விஜய் சேதுபதி, ஆர்யா நடிப்பு அருமை!

முரட்டு தமிழச்சி ‏@Mahis555 - வெளிநாட்டு பொருள்களால் தான் பிரச்சனை என்று இருந்தவர்களுக்கு வெளிநாட்டு குப்பைகளும் பிரச்சனை தான் என்று புரியவைத்த படம் #புறம்போக்கு

தோ கோஸ்மீன் ‏@ThoKosemeen - வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் போன்ற வார்த்தைகள் இல்லாத நாட்டுப் பற்று படம்......#புறம்போக்கு

devimani ‏@devimani - எஸ்.பி.ஜனாவின் புறம்போக்கு படத்தின் நாயகனின் பெயர் மதுரை தூக்குமேடை பாலுவை நினைவு படுத்தியது..எத்தனை கம்யூனிஸ்டுகளுக்கு நினைவு இருக்கும்.?

Ganesh Murthy ‏@GaneshMurthypre - கமல் படம் நெடுகிலும் கூறி உணர்த்த முயன்று தோற்ற தூக்குதண்டனை msgஐ ஜனநாதன் எளிமையாக உணர்த்திவிட்டார் #புறம்போக்கு என்கிற பொதுவுடைமை

jagadeesh (Advocate) ‏@JagaHeart - இளைய சமுதாயம் சமீபத்தில் வெளியான "புறம்போக்கு" என்ற திரைப்படத்தை காணுங்கள்.எனது வேண்டுகோள்..!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x