Published : 08 May 2015 16:52 pm

Updated : 08 May 2015 17:05 pm

 

Published : 08 May 2015 04:52 PM
Last Updated : 08 May 2015 05:05 PM

ட்வீட்டாம்லேட்: அஜித்Vsவிஜய் போல அன்புமணிVsஸ்டாலின்

vs-vs

தமிழகத்தில் திறந்த மடல் கலாசாரம் பிறந்துள்ளது. கடந்த வாரம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை சுட்டிக்காட்டி, பாமக எம்.பி. அன்புமணி 'தமிழகத்தை சீரழித்ததில் திமுகவுக்கு பங்கில்லையா?' என குறுக்கு கேள்வி எழுப்பி திறந்த மடல் ஒன்றை எழுதினார்.

ஆனால் அன்புமணியின் கடிதத்துக்கு, திமுக முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன் சார்பில் பதில் அனுப்பப்பட்டது. ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்துக்கு தாமரைச்செல்வன் (தருமபுரி தொகுதியில் அன்புமணியால் தோற்கடிக்கப்பட்டவர் ) மூலம் தி.மு.க. பதில் அளித்தது இந்த விவகாரத்துக்கு மேலும் காரம் சேர்த்தது. அன்புமணியைச் சுட்டிக்காட்டி, தங்களது தகுதிக்குரியவரே பதில் அளித்துள்ளார் என்று தி.மு.க தரப்பு தெரிவித்தது.


உடனடியாக அன்புமணியிடமிருந்து தனது தகுதிகளைப் பட்டியலிட்ட 3-வது கடிதமும் பறந்தது. இந்த பதில் கடிதங்கள் தமிழக அரசியலில் புது உத்வேகத்தை ஊட்டியுள்ளது. திறந்த மடல் கலாசாரம் பொதுமக்கள் அளவில் பெரிய அளவில் பேசப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் இரண்டு கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை விவாதிக்க வைத்துள்ளது. ட்விட்டர் குறுந்திண்ணையிலும் ஸ்டாலினா அல்லது அன்புமணியா? என்ற சண்டை கடந்த ஓரு வாரமாக ஓயவில்லை. ட்வீட்டரில் பகிரப்பட்ட அத்தகைய கருத்துக்கள் இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...

அபிசேக் மியாவ் ‏@sheiksikkanthar - ஸ்டாலின்வுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார்.-அன்புமணி# கட்டதுரைக்கு எப்ப பாரு நம்மல்ட வம்பிழுகிறதே வேலையா போச்சு ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்.

Pradeesh ‏@gpradeesh - தினம் 5 வாட்டி குளிக்கிறேன், 10 வாட்டி பல் தேய்க்கிறேன்.. # அன்புமணி தகுதிப் பட்டியல்.

சி.பி.செந்தில்குமார் ‏@senthilcp - தமிழகத்தின் அவல நிலைக்கு DMK, ADMK தான் காரணம்- அன்புமணி ராமதாஸ் #,கூச்சமே இல்லாம கூட்டணி அமைக்கும்போது இது தெரியலையா?

தல Follower ‏@chennai_007_guy - அன்புமணி மூன்றாவது முறையாக ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்சாராம்! 2G ஆர் 3G இன்டர்நெட் Pack போட்டால் மெயில்ல அனுப்பிடலாம்ல! #CommonSense

ச.த. வெற்றி செல்வம் ‏@StVettri - அன்புமணி கடிதம் பற்றி பதில் கூற விரும்பவில்லை - ஸ்டாலின் # பயமா குமாரு.

யுகராஜேஸ்® ‏@yugarajesh2 - 50 ஆண்டு கால தமிழக நிலவரம் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க வாருங்கள்-அன்புமணி# 49 வருஷ நிலவரம் குறித்து மட்டும் தான் பேசுவேன். 'டீலா நோ டீலா?'

கெக்கெபிக்குணி ‏@kekkepikkuni - #ஆவேசம் ஒரே வாரத்தில் வாரிசுகளின் பொங்கல் #ராகுல்காந்தி #ஸ்டாலின் #அன்புமணிராமதாஸ்.

seka pugazhenthi ‏@PugazhenthiSeka - இன்றைய அரசியலில் திரு அன்புமணி ராமதாசை விடவும் நாகரீகமாக அரசியல் செய்யும் தலைவர்கள் யார்..?

வேலையில்லா பட்டதாரி ‏@mkmanibe - அஜித் -விஜய் சண்டைக்கு அப்புறம் இந்த அன்புமணி-ஸ்டாலின் சண்டதான்யா நல்லாருக்கு.

இரண்டாம்துக்ளக் ‏@2amtughluq - தகுதியானவருடன் மட்டுமே விவாதிப்பேன்: அன்புமணி தகுதியான ஆள் இல்லை- ஸ்டாலின். #கூடை வச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட்டு இல்ல.

கெட்ட பய காளி ‏@yasavi - அன்புமணி வைத்தது நல்ல செக் அண்ட் மேட் மூவ்தான். ஆனா பாருங்க அவர் சாதனையாக அடுக்கியிருப்பதில் பாதிக்கு மேல் சாதனையில்லை.

ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - சாதியைக் கழட்டி விட்டு வந்தால் ஒழிய முதல்வராவது வெறுங்கனவு தான்!#அன்புமணி

யுகராஜேஸ்® ‏@yugarajesh2 - இதோ என் தகுதி பட்டியல் விவாதிக்க வேறு என்ன வேண்டும்?-ஸ்டாலினுக்கு அன்புமணி மீண்டும் கடிதம் #ஆதார் அட்டை , ரேசன்கார்டு ஜெராக்ஸ் 3 காப்பி வேணும்

சிங்கத்தின் கர்ஜனை ‏@AandeaDA - தமிழக மக்களுக்காக விஸ்பரூபம் எடுப்பேன் #ஸ்டாலின் #ஃபோன் வயர் பிஞ்சு 5வருசம் ஆகப் போகுது..

•••பூனையார்•••® ‏@poonaiyar - ICUவில் இருக்கும் தமிழகத்தை நான் குணமாக்குவேன்-ஸ்டாலினுக்கு அன்புமணி கடிதம்.

#ஸ்டாலின் mindvioice:நாம முதல்வரானால் GHக்கு இவர்தான் முதல்வர்.

அத்தி ஜோதிபாரதி ‏@jothibharathi - ஆக்சுவல் ரிசல்ட் வில் பீ ஆன் 11-த் மே...(ஆடுகள் ஜாக்கிரதை)!#அம்மா#ஓபிஎஸ்#ஸ்டாலின்#அன்புமணி#சீமான்#விஜயகாந்த்#வாசன்.

CSK Prabhu ‏@prabhutwits - அன்புமணிக்கு தைரியம் இருந்தா ஆட்சியில் இருக்கும் அதிமுகவுக்கு ஒரு திறந்த மடல் எழுதலாம்ல... சும்மா ஒரு டவுட்டு...

தமிழ்kசெந்தில் ‏@thamizhKsenthil - அன்புமணி தன்னை முதல்வர் வேட்பாளர்னு வெளிக்காட்டிக் கொள்ளவே ஸ்டாலினின் முண்டா பனியனை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறார்!

S.K Soundhararajan ‏@SSk0005556 - ஸ்டாலினுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார்.-அன்புமணி#அப்படியே விஜயகாந்த் உடன் விவாதிக்க தயாரா?

It's_Me ‏@Its_My_corner - ஸ்டாலினோடு வெளிப்படையான விவாததுக்கு மீண்டும் சவால் விடுத்தார் அன்புமணி - செய்தி: ***தல! போயிடாத தல..

மஹான் அன்பு ‏@AnbarasuRK - அனேகமா கேப்டனோட அரசியல் காமடி ஷோவ இனிமேல் அன்புமணி கன்டினியு பன்னுவாரு போல தெரிது.!

யுகராஜேஸ்® ‏@yugarajesh2 - தகுதியான நபர்களுக்கு மட்டும் தான் பதில் சொல்ல விரும்புகிறேன்-ஸ்டாலின்#சாயந்திரம் 6 மணிக்கு மேல லட்சம் ரூபா தந்தாலும் வேலை செய்ய மாட்டேங்க?


#ட்வீட்டாம்லேட்ஸ்டாலின்அன்புமணி #ஸ்டாலின் #அன்புமணி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x