Published : 23 May 2015 16:38 pm

Updated : 23 May 2015 17:07 pm

 

Published : 23 May 2015 04:38 PM
Last Updated : 23 May 2015 05:07 PM

ட்வீட்டாம்லேட்: மறவாத 80-களின் தமிழ் சினிமா குறிப்புகள்

80

எதோ ஒரு தெருவில் ஒரே ஒரு வீட்டில் மட்டும் இருக்கும் தொலைக்காட்சியைப் பார்க்க அடித்து பிடித்து இடம் போட்டு படங்களை பார்த்த 80-களின் நினைவுகளை நினைவூட்டும் வகையில் #80sTamilcinema என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ் ட்வீட்டாளர்கள் மிகவும் ருசிகரமாக 80-களில் வெளியான சினிமாக்களில் பார்த்து வியப்படைந்த தங்களது நினைவுக் குறிப்புகளை கொட்டி வருகின்றனர். இன்றைய ட்வீட்டாம்லேட்டில் 80-களின் நினைவுகள்...

இளையகாஞ்சி ‏@ilayakaanchi - ஹீரோயின் வில்லன பாத்துட்டு.. வாய்மேல கைவச்சி..300டெசிபல்ல கத்துவாங்க..#80sTamilCinema.

வெட்டுப்புலி ‏@Meeran8787 - இப்படியே ஆள் ஆளுக்கு பேசாம இருந்த எப்டி பஞ்சயத்ல ஒருத்தன் முதல்ல பேசுவான் #80sTamilCinema.

ச ப் பா ணி ‏@manipmp - உதட்டில ரத்தம் வந்தா தான் திருப்பி அடிப்பாங்க ஹீரோஸ் #80sTamilCinema.

குணா யோகச்செல்வன் ‏@g4gunaa - மலைப்பாதைல காரோ.. ஜீப்போ போனா கண்டிப்பா ரேடியேட்டர்ல தண்ணி தீர்ந்துடும்! #80sTamilcinema tamil.

ஆல்தோட்டபூபதி ‏@thoatta - உப்புமா செய்யனும் ரவை வாங்கிட்டு வாடான்னு ஹீரோவோட அம்மா சொன்னாக்கூட, 'உன் ஆசைய நிறைவேத்தறேம்மா'ன்னு தான் போவானுங்க #80sTamilCinema.

அனாமிகா ‏@MissLoochu - மோகன் பாட நதியா ஆட விசு விளக்கம் தர மனோரமா சிரிக்க நாட்டாம தீர்ப்புகூற கவுண்டர் செந்தில எட்டி உதைக்க ஒரே காமெடிதான் போங்க #80sTamilCinema.

இளநி வியாபாரி ‏@MrElani - காட்டு பங்களா #80sTamilcinema.

ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - க்ளைமேக்ஸ்ல க்ரூப் போட்டோ எடுக்குறப்ப யாராவது மொக்கை போடுவாங்க உடனே எல்லாரும் சிரிக்க..சுபம்!#80sTamilcinema.

மாஸ் காதர் ‏@MoideenKadhar - இப்ப உள்ளவங்க என்ன சண்டை போடுறாங்க..எங்க அண்ணன் ராஜ்கிரண் சண்டைக்கு ஈடாகுமா..எலும்பு உடையும்லே #80sTamilCinema.

c.gurumoorthy ‏@karunaiimalar @sivaaa_twits - மாதுரி மாதவி எங்களின் எழுச்சி நாயகி "சில்க் ஸ்மிதா" அனைவரும் அழகு.

ச ப் பா ணி ‏@manipmp - சத்யராஜுக்கு மத்தியானம் ஒரு மணிக்கு ரேப் சீன் கொடுத்திருப்பாங்க #80sTamilCinema.

எழுத்தாளன்® ‏@WriterAzar - இளையராஜாவினால் மட்டுமே வெற்றி கண்ட பல நூற்று படங்கள்!!!☺️☺️#80sTamilCinema

Rajesh R Rajasekar ‏@ahsuna007 - கிராமத்து சப்ஜெக்ட் படம்னா கண்டிப்பா ஆலமரம் வந்துரும்,blouse போடாம 4 ஆயா வந்துருவாங்க #80sTamilCinema.

மாஸ் காதர் ‏@MoideenKadhar - ராமராஜன மென்சன் பண்ணாம இந்த டேக் முழுமை பெறாது.. #80sTamilCinema.

⇝அருண் குமார்⇜ ‏@Arun_Rangiem - பண்ணையார் வீட்டு பொண்ணுங்க பால்காரன பயங்கரமா லவ் பண்ணுவாங்க#80sTamilCinema.

நாகராஜசோழன் ‏@kandaknd - காந்திமதி யின் பொன் மொழிகள்! மண்ணெண்ண வேப்பெண்ண வெளக்கெண்ண #80sTamilCinema.

அருண் குமார்⇜ ‏@Arun_Rangiem - ஒரு புலி போட்டோ, ஒரு மான் போட்டோ..மாத்தி மாத்தி காட்டுனா பயங்கரமான ரேப் நடக்குதுனு அர்த்தம் #80sTamilCinema.

திருச்சி மன்னாரு ‏@TrichyMannaru - ஹீரோ ஹீரோயின் முகத்த பாத்து பேச மாட்டாங்க. ஹீரோ ஃபேன பாத்து பேசுவாரு ஹீரோயின் ஜன்னல் பாத்து பேசும் #80sTamilcinema #கோபால்.

✍ரைட்டர் பச்சப்புள்ள ‏@sivaaa_twits - ரேப்சீன்ல வில்லன் ஈரோயினி ட்ரெஸ நாலுமணி நேரமா போராடி லைட்டா கிழிச்சி வெச்சிருப்பான்.. ஈரோ வந்து சட்டைய கழட்டிக்குடுப்பாரு.

Gowthamvpm ‏@globetricks - இடி இடிச்சாலோ, கரப்பான் பூச்சியைப் பார்த்தாலோ ஹீரோயின் கரெக்டா ஹீரோவை தான் கட்டிபிடிப்பாங்க .உடனே லவ் வரும் #80stamilcinema.

குறும்புக்காரன் ‏@kurumbukaran - எல்லா பெண்களும் கமல் ரசிகைகள்.

ஜூனியர் ஓல்ட்மாங்க் ‏@jroldmonk - no vacancy வேலை காலியில்லை #80sTamilCinema.

திருச்சி மன்னாரு ‏@TrichyMannaru - உடம்புல எந்த இடத்துல குண்டு பாஞ்சாலும் ஹூரோ வெங்காயம் அறுக்கும் கத்தியை வச்சு குண்ட வெளிய எடுத்து ப்ளாஸ்த்ரி போட்டுக்குவாறு #80sTamilCinema

கூமுட்டை ‏@kuumuttai - ரெண்டு பூவும் உரசிக்கொண்டால்... அவுங்கவுங்க கற்பனையை யூஸ் பண்ணிக்கோங்க... #80sTamilcinema.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ட்வீட்டாம்லேட்#80sTamilcinemaட்விட்டர்கவுண்டமணிசெந்தில்ராமராஜ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author