ட்வீட்டாம்லேட்: பழைய பன்னீர்செல்வமும் சில பதிவுகளும்

ட்வீட்டாம்லேட்: பழைய பன்னீர்செல்வமும் சில பதிவுகளும்
Updated on
2 min read

தமிழக முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் இருந்த காலக்கட்டத்தை நினைவுகூர்ந்து ட்விட்டரில் பல கோணங்களில் கொட்டப்பட்டு வரும் கருத்துகளில் மிகச் சில இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...

Tamil Cinema Today ‏@TamilRasigan1 - அழுதுகிட்டே பதவியேத்துட்டு, சிரிச்சுட்டே ராஜினாமா பண்ற மனசுருக்கே அதான் சார் கடவுள் #ஓபிஎஸ் #OPS #JayaReturns.

பேங்க் ஆபிசர் ‏@Sathish26990 - தமிழகத்தின் மன்மோகன் சிங் #ஓபிஎஸ்.

சுப்புணி ‏@iamsubramani - தட் படையப்பா சிவாஜி தாத்தா மொமண்ட் #OPS submits his resignation. Leaves Raj Bhavan with smile on his face #Jayalalithaa.

S.K Soundhararajan ‏@SSk0005556 - தமிழகத்தில் முதல்வராக இருந்து அமைச்சரானவர் ஒ.பன்னீர்செல்வம் தான். வரலாறு முக்கியம் அமைச்சரே.

பாபு - Babu ‏@rcbabu1 - ஊரெங்கும் பரவலாக காற்றும் மழையும் வருவதால் UPSக்கு ஓய்வு #OPS ராஜினாமா.

The UnReal Times ‏@TheUnRealTimes - பல மாதங்களாக ஜெயலலிதா குரலுக்கு டப்ஸ்மெஷ் அளித்து வந்த ஒ பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.

ஆழ்வார்க்கடியான் ‏@Tamilblr - பதவியேற்கும்போது மறந்தும் சிரித்துவிட கூடாது, பதவி விலகும்போது துளியும் கவலை முகத்தில் தெரியக்கூடாது.. பாவம்தான் #OPanneerselvam #ஓபிஎஸ்

நா.குமரேசன் ‏@kumaresann45 - முதல்வர் பதவியிலிருந்து ஓபிஎஸ் ராஜினாமா!!# ஜெ. எனும் மெயின் பவர் வந்தவுடன் ஒபிஎஸ் என்ற யூபிஎஸ் தன் பணியிலிருந்து விலகிவிட்டது!!

சிஎஸ்கே வாழவந்தார் ‏@Iam_SuMu - கொடுக்கப்பட்ட பணியை திறம்பட நடத்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு வாழ்த்துகள் #வரனும் பழைய பன்னீர்செல்வமாக வரனும்!

anbu ‏@anbu - கொடுத்தவனே பிடுங்கிகொண்டாண்டி...bgm :-P.

ரயில்பயணி ‏@prasanna_tweets - பூமாதேவியின் ஆண் வெர்ஷனை #Panneerselvam வடிவில் காண்கிறேன்.. பொறுத்தார் ஒருநாள் தமிழ்நாடு ஆள்வார் #Panneerselvam.

ராஜா★ ‏@raja__k - #JayaReturns பன்னீர்செல்வம் ராஜினாமா பண்ண கையோட முதல் வேலையா ஷேவ் தான் செய்வாறுனு நினைகிறேன்.

ஃபேஸ்புக்கிலிருந்து....

Šëlvá Řäj - முதல் முறையாக பதவி விலகியதுக்கு அதிக கைத் தட்டுகள் பெற்றவர் ஒ பன்னீர்செல்வம் தான் #jayareturns.

Su Po Agathiyalingam - பீஹாரில் நிதீஷுக்கு ஒரு பன்னீர் கிடைக்காததால் எவ்வளவு சிக்கல்? அம்மான்னா சும்மாவா? #panneerselvam.

Durai Karuppusamy - நாளை முதல் ‪#‎OPS‬ மக்களின் முதல்வர் என்று அழைக்கபடுவறா? ‪#‎டவுட்டு.‬

Amit Ganguly ‏@leosamit - #Panneerselvam கிண்டி ஆளுநர் மாளிகை பக்கத்திலேயே வீடு வாங்கிப் போட்டா வசதியா இருக்கும். அடிக்கடி வந்து போகலாம் பாருங்க #AmmaReturns.

ரெங்கா வெற்றி! ‏@r_vendan - ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகும் தகுதி எல்லா அதிமுக காரங்களுக்கும் கிடைச்சுடாது. #ஒபிஎஸ்.

SANJEESH ROR ‏@Haryanvi_Live - பன்னீர்செல்வத்துக்கு இன்று விடுதலை #Panneerselvam #JayaReturns.

Revanth Antony PK - கருத்தில் வேறுபாடுகள் பல இருந்தாலும் முன்னாள் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சிறந்த விசுவாசி என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in