

வசந்தபாலன், இயக்குநர்:
ஒரு ஆளுமையாக ஜெயகாந்தனை எனக்கு பிடிக்கும். கர்வமாக ஒரு நிஜ கலைஞன் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயகாந்தன். தான் விரும்பிய வாழ்க்கையை மிக சந்தோசமாக நிதானமாக அழகாக வாழ்ந்து மடிந்தான் ஒரு எழுத்து கலைஞன்....
பார்த்திபன்,நடிகர், இயக்குநர்:
தமிழின் உயிர் எழுத்துக்களில் ஒன்று தன் உயிரை உதிர்த்துவிட்டு இனி எழுத்தாக மட்டுமே வாழும். எழுதுபவனையெல்லாம் எழுத்தாளன் எனத் (தானே) அழைப்பதுண்டு.
ஆனால் தன் எழுத்தின் மூலம் தமிழையே ஆள்பவனை, தனித்துவ ஆளுமையின் மூலம் சமூகத்தில் தன் சுவடு பதித்தவனை என்னவென அழைப்பது? சீரிய சிந்தனைகள் மூலம் சீறிய சிங்கம் ஜெயகாந்தன்!