

உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாவல் ஆசிரியர் ஆர்தர் ஹெய்லி (Arthur Hailey) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இங்கிலாந்தின் லூடன் நகரில் (1920) பிறந்தார். சிறு வயதி லேயே புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந் தார். வறுமையால் 14 வயது டன் பள்ளிப் படிப்பு நின்றது.
* ‘பஸ் அண்டு டிரக் டிரான் ஸ்போர்ட்’ என்ற பத்திரிகை யில் உதவி ஆசிரியராக எழுத்துப் பணியைத் தொடங் கினார். தன்னம்பிக்கையை ஊட்டிவளர்த்த பெற்றோர்தான் தனது வெற்றிக்கு காரணம் என்பார். 1939-1947 காலகட்டத்தில் கனடாவில் வசித்தார். அப்போது விமானப் படையில் பணிபுரிந்தார்.
* பிறகு பல இடங்களில் பல்வேறு வேலைகளை செய்துகொண்டே பகுதிநேர எழுத்தாளராக இருந்தார். தொலைக்காட்சியில் இவரது முதல் நாடகம் ஒளிபரப்பாகி, வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 1956 முதல் முழுநேர எழுத்தாளரானார். 1969-ல் பஹாமாஸ் சென்று குடியேறினார்.
* இவரது படைப்புகள் வெவ்வேறு தொழில் அல்லது வர்த்தகப் பின்னணியை கதைக்களமாகக் கொண்டவை. மனித முரண்பாடுகள், சூழல்கள் எவ்வாறு சமூகத்தையும் மக்களையும் பாதிக்கின்றன என்று கவனமாக ஆராய்ந்து திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு நாவல்கள் எழுதினார்.
* ‘ஒரே மாதிரியான வெற்றி ஃபார்முலாவை பயன்படுத்தி எழுதுகிறார்’ என்று விமர்சிக்கப்பட்டாலும், இவரது ஒரு நாவல்கூட விற்பனையில் சாதனை படைக்கத் தவறியதில்லை.
* ஒரு நாவல் எழுதத் தொடங்கும் முன்பு ஓராண்டுக்கு கதைக்களத்தை ஆராய்ந்து குறிப்பு எழுதுவார். குறிப்புகளை 6 மாதம் ஆராய்ந்த பிறகு, புத்தகத்தை எழுதி முடிக்க ஒன்றரை ஆண்டு எடுத்துக்கொள்வார்.
* ‘ஹோட்டல்’ என்ற நாவலை எழுத இவருக்கு 4 ஆண்டுகள் ஆகின. தொடர்ந்து ஓராண்டுக்கு விற்பனை யில் சாதனை படைக்கும் புத்தக வரிசையில் அது இடம்பெற்றது. இந்த நாவலை எழுதும் முன்பு, ஹோட் டல் தொழில் சம்பந்தமாக 2 டஜன் புத்தகங்கள் படித் திருக்கிறார்.
* 67 வயதில் ‘தி ஈவ்னிங் நியூஸ்’ என்ற புத்தகத்தை எழுத பெரு நாட்டின் காடுகளில் சுற்றித் திரிந்தார். இவரது புத்தகங்கள் உலகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகள் 17 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளன.
* இவரது வீல்ஸ், தி மனி சேஞ்சர்ஸ், ஓவர்லோடு, ஸ்டிராங் மெடிசின் ஆகிய நாவல்கள் பிரபலமானவை. இவரது நாவல்களைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங் கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். இவரது ஏர்போர்ட் நாவலைத் தழுவி தயாரிக்கப்பட்ட திரைப்படம் மகத்தான வெற்றி பெற்றது.
* எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கான கனடா கவுன்சில் விருது, கனடாவின் சிறந்த தொலைக்காட்சி நாடக ஆசிரியர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள் ளார். சாதனை எழுத்தாளராக விளங்கிய ஆர்தர் ஹெய்லி 84 வயதில் (2004) மறைந்தார். ஹெய்லியின் எழுத்துக்கு உருகும் வாசகர்கள் உலகம் முழுவதும் பல கோடி பேர் இருக்கின்றனர்.