

கர்நாடக அரசு மேகேதாட்டு பகுதியில் அணைகளை கட்டுவது உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக தேமுதிக தலைமையில் தமிழக எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்கும் முயற்சி எடுக்கப்பட்டது.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரை இதற்காக சந்தித்து அவர் அழைப்பு விடித்திருக்கிறார். பொதுப் பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சிகளோடு ஒன்றினைந்து ஆலோசனை நடத்துவது மற்ற மாநிலங்களில் அவ்வப்போது நடந்தாலும் தமிழகத்தில் அதற்கான சூழல் இல்லாமல் இருந்துவந்தது. இதனை முதன் முறையாக விஜயகாந்த் தகர்த்தார்.
இந்த முயற்சி தமிழக அரசியலில் முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்பதாக அரசியல் ஆர்வலர்களின் நம்பிக்கையாக இருந்தது. இருப்பினும் இதனை முன்னெடுத்திருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முயற்சியை சிலர் கலாய்ப்புகளுக்கு உள்ளாக்கி வந்தனர்.
எதிர்மறையாகவுன பல கருத்தாக்கங்கள் இருந்தாலும் கட்சித் தலைவர்களை அவர் சந்தித்தது சில நல்ல பலனை ஏற்படுத்தும் என்று நம்பிய பலர் சந்திப்புக்கு பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜயகாந்த் கலந்துகொண்டதும் தங்களது மனநிலையை ஒட்டுமொத்தமாக மாற்றிக் கொண்டனர்.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஜயகாந்த் குறித்து நேர்மறையாக வந்து குவிந்து கொண்டிருந்த கருத்துக்கள், பத்திரிகையாளர்களை அவர் சந்தித்த பின்னர் அப்படியே தலைகீழானது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரதமரை சந்திக்கும் முன் கொட்டப்பட்ட எதிர்பார்ப்பு கருத்துக்களின் போக்கு சில மணி நேரத்தில் மாறியது. அப்படி மாறி மாறி குவிந்த விஜயகாந்தின் ட்ரெண்ட் குறித்து இன்றைய ட்வீட்டாம்லேட்டில் பார்க்க இருக்கிறோம்.....
சந்திப்புக்கு முன்...
இளந்தென்றல் @Elanthenral - மேகதாது அணை தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் இணைத்து பிரதமரை சந்திக்கிறார் கேப்டன் நல்ல துவக்கத்தின் அடையாளம்!
நிலா காதலன் @MMSUNLOTUS : கூட்டணிக்காகவே பெரும்பாலும் அரசியல் சந்திப்புகள் நிகழும், அணை பிரச்சினைக்காக நடப்பது அபூர்வம். #வாழ்த்துக்கள்_கேப்டன்.
Gloria @glonas7472 - மேகதாது அணை விவகாரமாக விஜயகாந்த் தலைமயில் தமிழகத்தின் 10 கட்சிகள் பிரதமரை சந்திக்க முடிவு. பாராட்டப்படவேண்டிய முயற்சி. #கேப்டன் நல்லவர்தாம்பா.
Satheesh Kumar @saysatheesh - அனைத்து எதிர்கட்சி பிரதிநிதிகளுமாக கேப்டன் தலைமையில் இன்று மோடியை சந்திக்கிறார்கள். மகிழ்ச்சி #மேகதாது.
Sen @Sen_Tamilan - தமிழக முதல்வர் #ops பிரதமரை சந்தித்ததை விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது #கேப்டன் குழு!
சுந்தர் @nksundar - விஜயகாந்த் டுவிட்டரில் இணைந்தால் அவரு கட்சிகாரங்கள விட பாலோயர்ஸ் அதிகமாக இருப்பாங்க. #மாஸ்_கேப்டன்.
S.K Soundhararajan @SSk0005556 - எல்லாத்தையும் சந்தித்த விஜயகாந்த் லட்சிய திமுக தலைவர் டி.ஆரை சந்திக்காதது. தமிழக அரசியல் பெரிய ஏமாற்றம் தான்.
இடும்பாவனம் கார்த்தி @idumbaikarthi - ஓபிஎஸ் பிரதமரை தனியே சந்தித்தது சுயநலம். -விஜயகாந்த் # அதாவது இங்கிலிஷ்ல சொல்லணும்னா பிரசிடென்ட்டை தனியா சந்திச்சது தப்புன்னு சொல்ல வரீங்க?
இரண்டாம்துக்ளக் @2amtughluq - ”நேத்து.. கருணாநிதி இளங்கோவன், தமிழிசை சௌந்தரராஜன், வாசன் திருமாவளவன் , பார்ப்பது போல கனவு கண்டேன்” #ஆண்டவா விஜயகாந்த் இப்படி சொல்லிடகூடாது.
வெண்பூ Venkat @iVenpu - அணை விசயத்தில் ஒரு துரும்பளவேனும் தமிழர்களுக்கு உதவும் என்பதால் விஜயகாந்த் மற்ற கட்சித் தலைவர்களை சந்திப்பதை மனதார வரவேற்கிறேன்.
CSK Prabhu @prabhutwits - மேகதாது அணை விவகாரம் : விஜயகாந்த் தலைமையில் அனைத்துக்கட்சி குழு பிரதமருடன் சந்திப்பு ”10 வருட அரசியல் வாழ்க்கையில் உருப்படியான முதல் காரியம்”
சுபாஷ் @su_boss2 - ராகுல் காந்தி தெளிவா பேசுறாராம்.. விஜயகாந்த் எல்லா கட்சி தலைவர்களையும் போய் பார்க்குறாராம்..# என்னய்யா நடக்குது நாட்டுல???
சந்திப்புக்கு பின்...
ஏகலைவன் @Eakalaivan - நிருபரை அடிக்கப் பாய்ந்தார் கேப்டன் விஜயகாந்த். # திரும்ப திரும்ப பேசற நீ! திரும்ப திரும்ப பேசற நீ!
ஜிரா GiRa @RagavanG - நேத்துதான் சொன்னேன். இன்னைக்கு நிரூபிச்சிட்டாரு விஜயகாந்த். இவர வெச்சி ஒன்னும் பண்ண முடியாது.
நர்சிம் @narsimp - கிடைத்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டு அடுத்த நிலைக்கு முன்னேறாமலும்,தலைமைப்பண்புகளை வளர்த்துக்கொள்ளவே முயற்சிக்காமலும் போனவர் விஜயகாந்த்.
Green Child @Im_AriGM - இருக்குற வாய்ப்பை விஜயகாந்த் பயன்படுத்துவார்னு பாத்தா கொழ கொழன்னு உளறுரார்.. #Captain Rocks
யுகராஜேஸ் @yugarajesh2 - ஜெயா டீவி நிருபருக்கெல்லாம் பேட்டி தரமுடியாது-விஜயகாந்த்#தட்! கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் தரமுடியாது மொமன்ட்!
சுபாஷ் @su_boss2 - செய்தியாளர்களிடம் கோபப்பட்ட விஜயகாந்த் "அப்படின்னு செய்தி போடுறானுங்க..# அடேய் அவரு கம்முன்னு போயிட்டு கம்முன்னே வந்தா தாண்டா செய்தி.!
Nan Mani Then @Manvanan - நிருபரை அடிக்க பாய்ந்த விஜயகாந்த்: டில்லியில் பரபரப்பு. என்னடா மதியம் ஆகியயும் ஏதும் நடக்கலயேனு பாத்தேன் நான் பட்டு பட்டுனு பேசிடுவேன் போய!
ℳr.கொத்தவரங்கா @Kothavranga - செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கோபத்தைக் 'கக்கியது' இது முதல் முறையல்ல #சேர்த்து வச்ச விஷத்த எல்லாம் இந்த ஸ்நேக் பாபு உன் மேல தான்டா கக்குவான்.
கெட்டவன் @kettavan - டெல்லியில் ஜெயா டி.வி. நிருபர் மீது அடிக்க பாய்ந்தார் விஜயகாந்த் # தட் நா குடிச்சுருக்கும்போது குடுத்த கடன கேக்காத கருப்பசாமி மூமண்ட் ;)))
Suresh Kandeeban @KandeebanSuresh- நீ யாரு எந்த டிவி....மைக்க தூக்கி அடிச்சிப்புடுவேன்....# டெல்லி பிரஸ் மீட்டில் எகிரிய விஜயகாந்த்.
அகராதி @agarathi1 - ஜெயா டி.வி.நிருபர் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது-விஜய்காந்த் #இத நான் ஏன் சொல்றேன்னா தண்ணி பாட்டில் பத்து ரூவாய்க்கு விக்குது மக்கழே.
கதா @GobiJmp - நிலைமை என்னனா அவர் பண்றத சொன்னாக்கூட கேலி லிஸ்ட்ல வந்துடும். சிம்பிள்...உங்களுக்கு அரசியல் சரிப்படாது #விஜயகாந்த் சார்.!?
Harish @iyakkunarHarish - எல்லாரும் ஒன்னு கவனிச்சீங்களா ? விஜயகாந்த் சன்டை போட்டுக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டு பாதியில் கழண்டுக்கொண்டுவிட்டார் பொன்.ராதா கிருஷ்ணன்.
அருண் சுப்ரமணியன் @Its_ArunS - கேப்டன் பண்ணுன காமெடிய தாங்க முடியாம பொன்னார் நேக்கா எஸ்கேப் ஆயிட்டாப்ல...!;-) ;-) ;-)
தட்டாங்கல் @npgeetha - @mercylivi ஆமா, அதுலயும் திருச்சி சிவா நொந்து போனார்.
நெற்றிக்கண் @thirupgp - #கேப்டன் #ஜெயாடிவின்னா கொம்பா மொளச்சிருக்கு.. தூக்கி அடிச்சேன்னு வெச்சுக்க..ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயீட்டு டா !பாக்குறியா!!பாக்குறியா !!
பரம்பொருள் @paramporul - நாளைக்கு எத்தன அவதூறு வழக்கு அந்தம்மா போடப்போகுதோ. இப்பலாம் வாயடைக்க அவுகளுக்கு இதான் ஆயுதம்.
பரம்பொருள் @paramporul - இதே ரிப்ளைய நான் டைப்ப வந்தேன்..சிவா ரொம்ப அசவுகரியாமா இருக்கறது நல்லா தெரியுது. @mercylivi ஜெயலலிதா கைய வெட்டிபுடுமா?#கேப்டன்