

நண்பன் என்னடா பகைவன் என்னடா
அவசரமான ஃபேஸ்புக்கிலே...
அன்பு கொள்வது அபத்தம் தானடா
விர்ச்சுவ லான உலகத்திலே...
க்ளோசு நண்பனே ஆன போதிலும்
பிளாக் செய்பவன் உண்டடா...
அன்புக் கூட்டத்தில் வீம்பு கொண்டவன்
நண்பன் ஆனதன் தீதடா...
நண்பன் ஆனதன் தீதடா...
ஃபேக்கு ஐடியின் அழைப்பை ஏற்றுநீ
நட்பு கொண்டது ஏனடா?
சாட்டில் வந்தவன் சேட்டை செய்வதைக்
கண்டு நொந்திடத் தானடா...
பள்ளி நாட்களில் துள்ளி ஆடிய
நட்பின் நிலையே வேறடா
முகத்தை மூடியும் பெயரை மாற்றியும்
பெ.கருணாகரன்
கண்ணா மூச்சிஇது தானடா
கண்ணா மூச்சிஇது தானடா
பழக்கம் இன்றியே பேரை பார்த்துதான்
அழைப்பு தருகிறார் பாரடா...
லிஸ்ட்டில் சேர்ந்தபின் முஷ்டி உயர்த்துவார்...
ஆளை ஆய்ந்துநீ சேரடா...
சண்டை என்பதே கொள்கை என்றபின்
நட்பு என்பது ஏனடா..?
மதிக்கும் நெஞ்சினை மதிக்கும் யாவரும்
உண்மை நட்புகள் தானடா...
உண்மை நட்புகள் தானடா...