

தமிழ் மகன்,எழுத்தாளர்:
'நான் இனிமேல் எழுதப் போவதில்லை' என்று ஜெ.கே. அறிவித்தார். சுமார் கால் நூற்றாண்டுகளாக எந்தப் படைப்பிலக்கிலத்தையும் அவர் செய்யவில்லை. ஆனாலும் தமிழ் எழுத்தாளர்களின் அடையாளமாக இன்றுவரை அவர்தான் இருந்தார்... இருக்கிறார்.
அவர் எத்தனை ஆண்டுகாலம் தீவிரமாக எழுதினாரோ, அத்தனை ஆண்டுகாலம் தீவிரமாக எழுதாமலும் இருந்தார். அவர் எழுதாத அந்தக் காலத்திலும்கூட மக்களால் எழுத்துச் சிங்கமாகப் போற்றப்பட்டவர் அவர் ஒருவர்தான்.
*
சு.ப.உதயகுமார்,சமூக செயற்பாட்டாளர்:
அழுத்தமான எழுத்தால் உள்ளங்களில் அருமையாகப் பாடிய ஜெயகாந்தன் அவர்களுக்கு ஆத்மார்த்த அஞ்சலிகள்!