Published : 03 Apr 2015 06:58 PM
Last Updated : 03 Apr 2015 06:58 PM

ட்வீட்டாம்லேட்: நண்பேன்டாவும் சில கலாய்ப்பு கருத்தாக்கமும்

ஓகே ஓகே இயக்குநர் ராஜேஷ் உதவியாளர் ஜெகதீஷ் இயக்கியிருக்கும் நண்பேன்டா, மீண்டும் உதயநிதி - சந்தானம் கூட்டணியில் வெளியாகியிருக்கிறது. நயன்தாரா கூடுதல் பலமாம். கலாய்ப்புகளை நம்பி களத்தில் இறங்கிய இந்தக் கூட்டணி படைப்பை எப்படியெல்லாம் கலாய்த்திருக்கிறார்கள் என்பதை ட்வீட்டாம்லேட்டில்...

தினேஷ் ‏@DineshUpdates - #Nanbenda செத்துட்டேன். நேரத்த வீணாக்கிட்டேன். உதயநிதி எப்பதான் நடிக்க கத்துப்பாரு?

ராகிஷோர் ‏@raKishore - 30 நாள்ல 30 கோடி செலவு செய்யனும்னு நம்ப தலைவர் ஒரு படம் எடுப்பாரே, அதவிட மோசமா இருந்துச்சு இந்த படம்.

வினோத் ‏@puthagappuzhu - #நண்பேன்டா - அடுக்கடுக்கான கிளைக்கதைகள் ஒரு மைனஸ். மற்றபடி OKOK, கதிர்வேலன் காதலை விட இது எளிதில் சகிக்கக்கூடியதே!

ரெட்டைசுழி ‏@SENTHIL_WIN - உதயநிதி நல்லா பழகிட்டாருபோல.. நண்பேன்டா சாங்ல எக்சர்ஸைஸ் வேகமா பண்றாரு:)))

வினோத் ‏@puthagappuzhu - #நண்பேன்டா முன்னே பின்னே இருக்கலாம்.ஆனால் இப்படத்தின் Asset லேடிசூப்பர்ஸ்டார் நயந்தாரா என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்கமுடியாது

சூனா பானா @SoonaaPaanaa - நண்பேன்டா நான் பார்த்த கடைசி உதயநிதி படம் இதுவாகத்தான் இருக்கும்.

நோபிட்டா ‏@iRaVuSu - செம படம் சார், வர வர டான்ஸ் நல்லா ஆடுறீங்க... நடிப்புல நல்ல முன்னேற்றம் தெரியிது @Udhaystalin #நண்பேன்டா

முகில் ‏@Vaanmugil - @Udhaystalin நியாயமாரே இது நியாயமா........? #நண்பேன்டா #மொக்கை

குமரன் ‏@kumaran52v - நண்பேன்டா ரிலீஸ் ஆகியிருக்கு, போகலாமா என்று கேட்டான், நீ என் நண்பனாக இருப்பின் இந்த கேள்வியை கேட்கும் எண்ணம் வந்திருக்காது என்றேன்.

சிந்து Talks © ‏@sindhutalks - சகாப்தம் நல்லாயிருக்கு போல !!! அவசரப்பட்டு் நண்பேன்டா புக்டு.

Jai ‏@ItisJai - இப்படி போயிட்டு இப்படி வந்தானாம்.. நண்பேன்டா பார்த்துட்டு எப்படியோ போனானாம் :P ஐ அம் பாவம்

Ajith Rinesh ‏@Rineshraja - நண்பேன்டா இந்த டைட்டில் அப்புறம் நயன்தாரா இந்த இரண்டையும் தவிர வேறு எதும் நல்லாவே இல்ல!!

வினோத் மலைக்கனி ‏@vinothjonty - செப்பா! ஒரு வலி'யா "நண்பேன்டா" பார்த்தாச்சு! சுருக்கமா படம் எப்படினு சந்தானம் ஸ்டைல்'ல சொல்லனும்னா. அவளோ பெரிய காமெடீ இல்லையே இது!!

மானஸ்தன் ‏@RascalRaGu - #Nanbenda Highly dissapointing ஆம்…அதுக்கு பலர் 2 பக்க Review…அடேய்…அவனுங்க கிட்ட இருந்து என்ன காவியமா எதிர்பாத்தீங்க? #OKOK ஓடுனதே பெருசு.

சிந்து Talks © @sindhutalks - நல்லபாம்பு கூட இதவிட நல்லா படமெடுக்கும்... டைரடக்டரே.... #நண்பேன்டா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x