

ஒரு கிராமத்தில் மனிதர்கள் எண்ணிக்கையைவிட குரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
குரங்குகளின் அட்டகாசத்தை ஊர் மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தும் எந்தப் பலனும் ஏற்படவில்லை.
இதையறிந்த வெளியூர்க்காரர், ஒரு லாரியைக் கொண்டு வந்து ஒரு குரங்கு 50 ரூபாய்க்கு வாங்கப்படும் என தண்டோரா அடிக்கச் செய்தார்.
ஊர் மக்களுக்கு சந்தோஷம் கரை புரண்டு ஓடியது.
ஊரில் இருந்த குரங்குகளையெல்லாம் பிடித்து 50 ரூபாய்க்கு விற்றுவிட்டார்கள். ஊரில் மருந்துக்குக்கூட ஒரு குரங்கு இல்லை என்பதை அறிந்த வெளியூர் வியாபாரி ஊர் மக்களிடம், “மேலும் குரங்கு இருந்தால் கொடுங்கள் 500 ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறேன்” என்று ஆசையைத் தூண்டிவிட்டுப் போய்விட்டார்.
ஒரு மாதம் சென்றதும் அதே குரங்கு வியாபாரி தனக்குப் பதிலாக வேறு ஒரு நபரை லாரியில் குரங்குகளை ஏற்றி குரங்கு வாங்கிய ஊருக்கு அனுப்பி, “ஒரு குரங்கின் விலை 100 ரூபாய்” என அறிவிக்க வைத்தார். மக்கள் 100 ரூபாய்க்கு குரங்கை வாங்கி 500 ரூபாய்க்கு விற்று விடலாம் என்ற ஆசையோடு எல்லாக் குரங்குகளையும் 100 ரூபாய் கொடுத்து வாங்கி விட்டார்கள்.
அவற்றை வாங்கத்தான் யாரும் வரவேயில்லை. 50 ரூபாய்க்கு குரங்கு வாங்கியவர் 100 ரூபாய்க்கு விற்று ஊர் மக்களை ஏமாற்றியது யாருக்குத் தெரியப் போகிறது?