யூடியூப் பகிர்வு: ரஹ்மான் - பரத்பாலா ஹோலி வர்ணஜாலம்!

யூடியூப் பகிர்வு: ரஹ்மான் - பரத்பாலா ஹோலி வர்ணஜாலம்!
Updated on
1 min read

ஒவ்வொரு வருடமும் வட இந்தியக் குடும்பங்களும், அவர்களின் நண்பர்களும், அக்கம் பக்கத்தினரும் வயது, அந்தஸ்து வித்தியாசங்கள் இல்லாமல் வண்ணப் பொடிகளைத் தூவியும், அவை கலந்த தண்ணீரை மற்றவர்கள் மீது பீய்ச்சி அடித்தும் ஹோலியைக் கொண்டாடுகின்றனர். | வீடியோ பதிவு கீழே |

எல்லோராலும் வண்ணமயமான திருவிழாவாகக் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு ஹோலியைக் கொண்டாடும் காணொளி ஒன்று சோனி நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

வெள்ளைக்கார சிறுவன் ஒருவன் ஹோலிக் கொண்டாட்டத்தைத் துவக்கி வைக்க, கறுப்பினப் பெண்ணொருவர் மகிழ்ச்சியுடன் வண்ணப்பொடிகள் தம் மீது விழுவதை ரசிக்கிறார். எல்லா மதத்தினரும், உலகம் முழுவதும் உள்ள நாட்டியக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தம்பதிகள் என அனைவரும் ஒன்று கூடி, ஒரே குடும்பத்தினராய் வண்ணங்களின் கலவையை அள்ளித் தெளித்து விழாவை ரசித்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைக்க, பிரபல வாய்ப்பாட்டுக் கலைஞரான இலா பலிவால் பாடியிருக்கிறார். 'மரியான்' பட இயக்குநரான பரத்பாலா இந்தக் காணொளியை இயக்கியிருக்கிறார். 'வந்தே மாதரம்', 'ஜன கண மண' போன்ற வைரல் வீடியோக்களில் கைகோத்த பரத்பாலா - ஏ.ஆர்.ரஹ்மான் இணை இதிலும் ஜோடி சேர்ந்திருக்கிறது.

</p>

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in