

விலங்கியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கரும், உயிரியலாளரும், கல்வியாளருமான சார் லஸ் ஹென்றி டர்னர் (Charles Henry Turner) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 3). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
ஓஹியோ மாநிலம், சின்சினாட்டி யில் பிறந்தவர். பள்ளியில் படிக் கும்போதே மேடையில் நன்றாகப் பேசுவார். சின்சினாட்டி பல்கலைக் கழகத்தில் உயிரி யலில் பி.எஸ் பட்டமும், எம்.எஸ். பட்டமும் பெற்றார்.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1907-ல் பி.ஹெச்டி. பட்டம் பெற்றார். விலங்கியலில் முனை வர் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் இவர். ஜார்ஜியா அட்லாண்டா பல்கலைக்கழகத்தில் உயிரியல் பேராசிரியராக மூன்று வருடங்கள் பணியாற்றிய பின், சம்னர் உயர் நிலைப் பள்ளியில் உயிரியல் ஆசிரியராக 1908-ல் சேர்ந்தார்.
முதுகெலும்பில்லாத உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில், குறிப்பாக, பூச்சிகளின் கேட்கும் திறன், காட்சித் திறன் மற்றும் அவற்றின் கற்றல் திறன், வேட்டையாடும் திறன் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்.
ஆராய்ச்சிகளுக்கான போதுமான கருவிகளோ, சோத னைக்கூட வசதிகளோ ஏறக்குறைய இல்லை என்ற நிலையிலும் குறைந்தபட்ச கருவிகளைக் கொண்டு, கடுமையாகப் பாடுபட்டு தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
தனது ஆராய்ச்சிகள் குறித்து 49 கட்டுரைகளை இவர் வெளியிட்டுள்ளார். பூச்சிகள் ஓசைகளின் தன்மைகளுக்கு ஏற்ப எதிர்வினை புரிவதையும் கண்டறிந்தார். கரப்பான் பூச்சிகள் அடுத்தடுத்த சோதனை முயற்சிகள் (ட்ரையல் அன்ட் எரர்) மூலம் கற்றுக்கொள்ளும் திறன் பெற்றிருப் பதையும் தேனீக்களால் வண்ணங்களைக் காண முடிவதை யும், நுகரும் திறன் இருப்பதையும் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தார்.
பூச்சிகள் முந்தைய அனுபவங்கள் வாயிலாகத் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண் டவை என்பதையும் கண்டறிந்தார். அதுவரை பூச்சிகள் அந்தந்தச் சமயங்களின் தூண்டுதல்களுக்கு ஏற்ப எதிர் வினை புரிபவை என்றே கருதப்பட்டு வந்தது.
எறும்புகள், சிலந்திகள், பிற வகைப் பூச்சிகளைப் பற்றிய இவரது ஆராய்ச்சிகளால் அவற்றின் பழக்க வழக்கங்கள் குறித்த விஷயங்களுக்கான அதிகாரபூர்வ ஆராய்ச்சியாளராகக் கருதப்பட்டார்.
விஞ்ஞான ஆராய்ச்சிகள் தவிர, ஆப்பிரிக்க அமெரிக்கர் களின் சமூக மேம்பாட்டுக்காகவும், கல்வி அறிவு பெறவும் இவர் கடுமையாகப் போராடினார். இவரது மறைவுக்குப் பிறகு ஆப்பிரிக்க அமெரிக்க மாற்றுத் திறனாளிகளுக்காக நிறுவப்பட்ட பள்ளிக்கு இவர் பெயர் சூட்டப்பட்டது.
இவர் ஆசிரியராகப் பணியாற்றிய பல பள்ளிகளுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டன. எம். இ. ரோஸ் எழுதிய பக் வாட்ச்சிங் வித் சார்லஸ் ஹென்றி டர்னர் என்ற புத்தகத்தில் இவரது ஆராய்ச்சிகள் குறித்து விரிவாக விவரிக்கப் பட்டுள்ளது.
2003-ஆம் ஆண்டில் இவரைப் பற்றி செலக்டட் பேப்பர்ஸ் அண்ட் பயோகிராஃபி ஆஃப் சார்லஸ் ஹென்றி டர்னர், பயனீர் ஆஃப் கம்பேரிடிவ் பிஹேவியர் ஸ்டடீஸ் ஆகிய கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இதய நோயால்1923-ஆம் ஆண்டில் 56-ஆவது வயதில் காலமானார்.