Published : 13 Feb 2015 03:59 PM
Last Updated : 13 Feb 2015 03:59 PM

என்னை அறிந்தாள் - A 2 Z குட்டிக் கதை!

Aழு மணியாகிவிட்டது. அமாவாசை வேறு. மகாபலிபுரம் Bச்சில் இதற்குமேல் தன் காதலனுக்காக, இந்த இடத்தில் தனியாக காத்திருப்பது சரியில்லை என்று Cதா கிளம்பினாள். அப்போது பெரிய மீசை, தா Dயுடன் தள்ளாடியபடி வந்த ஒரு குடிகாரன் அவளருகே வந்து Eயென்று அசிங்கமாக சிரித்தான்.

"உன்னை இங்க தனியா பாத்ததும் எனக்கு தண்ணியடிச்ச Fஃபெட்டு பத்து மடங்காயிருச்சு.. 500 ரூபா தரேன் வரியா?" என இன்னும் நெருங்க, அவளுக்கு லப்டப் எகிறி உடம்பு குப்பென்று வியர்த்துவிட்டது. மனம் உதவிக்கு கெஞ் Gயது.

'ச்சே... Hச்சக்கல நாய்.. என்னைப் பாத்து.. ச்சே.. தனியா வேற மாட்டிகிட்டோமே.. Iயையோ, இப்ப என்ன பண்றது? மத்த நாள்லயெல்லாம் இங்க JJன்னு கூட்டம் இருக்குமே.. இன்னைக்கு என்ன ஆச்சு? இவனை தட்டிக் Kக்க யாரும் இல்லையே.. Lலாரும் எங்க போயிட்டாங்க.. Mபுத்திய செருப்பால அடிக்கணும்.. Nன்னத்துக்கு இவ்ளோ நேரம் காத்திருக்கணும்? வில்லியம்ஸ் 5 மணிக்கு வரேன்னு சொன்னாரே.. 6 மணி வரைக்கும் பாத்துட்டு, வரலைன உடனே அப்பவே போயிருக்கலாம்.. இப்ப இப்படி மாட்டிகிட்டோம்.. பேசாம தள்ளிவிட்டுட்டு Oடிப் போயிடலாமா.. ம்ஹூம் துரத்தி Pடிச்சிருவான் தடிமாடு..'

"என்னா யோசிக்கற.. Qவாட்டர் வெச்சிருக்கேன்.. தரேன்.. வா.. அக்கம்பக்கம் Rரும் இல்ல.." இன்னும் நெருங்கினான். கண்கள் சிவந்திருந்தன.

கடவுளே! யாரும் வந்து காப்பாத்த மாட்டாங்களா? இவன்கிட்டயிருந்து Sகேப் ஆக என்ன வழி? யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவளை அவன் கட் Tப் பிடிக்க, " U.. U.. ராஸ்கல்.. விடுடா என்னை பொறுக்கி நாயே" எனத் திமிர, "இந்த Vராப்பெல்லாம் எங்கிட்ட நடக்காது.. வாடி.." என்று அவளை இழுத்தபடி நடக்க, அவன் கையை விலக்க முயன்றபோது, லேசான வெளிச்சத்தில் அவன் மோதிரத்தில் W என்ற எழுத்து மின்னுவதைப் பார்த்தாள்.

'அப்படியென்றால்.. தெரிந்துவிட்டது.. இது யாரோ ஒரு XYZ இல்லை.. இது என் வில்லியம்ஸ்..' புரிந்தபின் பதட்டம் தணிய, " வாப்பா போகலாம்.. அப்படியே இந்த மோதிரத்தை எனக்கு போட்டு, என்னை கல்யாணமும் பண்ணிக்கோ!" எனச் சொல்லி சிரிக்க, வில்லியம்ஸ் "ச்சே.. கண்டுபிடிச்சிட்டியா..!" என சிரித்தபடி தன் ஒட்டுமீசை, தாடியை எடுத்து கீழே போட, இருவரும் கைகோத்து நடந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x