Published : 30 Jan 2015 04:59 PM
Last Updated : 30 Jan 2015 04:59 PM

யூடியூப் பகிர்வு: உண்மைய சொல்லணும்னா- நலன் குமாரசாமி குறும்படம்

ஒரு படம் எடுக்கறதுன்னா ஏதோ எழுதன ஸ்கிரிப்டுக்க்காக கிடைக்கற எட்டுகோடி பம்பர் பரிசுன்னு நெனைக்கறாங்க சில பேரு. எடுத்துப் பாத்தாதானே தெரியும் என்ன வந்திருக்குன்னு... என்னவா வந்திருக்குன்னு...

தியேட்டர்லயோ, திருட்டு டிவிடிலயோ கண்ணுமுழிச்சி படங்களைப் பாத்துட்டா டைரக்டர் ஆயிடமுடியுமா? அதுக்குன்னு கண்ணுமுழி பிதுங்கற அளவுக்கு டெடிகேஷன் வேணும்னுல.

எப்படிவேணும்னாலும் படம் எடுக்கலாம் யார் வேணும்னா படம் எடுக்கலாம். வாங்கனவன் பாடு, பாக்கறவன் பாடுதானேன்னுதானே சிலர் அள்ளித்தெளிச்சி கோலம்போட்டுட்டு போய்கிட்டே இருக்காங்க.

கதை, பட்ஜெட், ஹீரோ, ஹீரோயின், காமெடி, சோகம் நடிப்பு நடிகருங்க.... கதைக்கான காட்சிகள், ஓப்பனிங் கிளைமாக்ஸ்னு எத்தனை ஆயிரம் ஜல்லிக்கட்டு தெரியுமா இதுல. எல்லாக் காளைகளையும் அடக்கினாத்தான் இங்கே ஜெயிச்சதா அர்த்தம்.

'உண்மைய சொல்லணும்னா' குறும்படத்துல ஜெயிக்கறதுக்கான அந்த ஆயிரம் விஷயத்தை அஞ்சாறு காட்சியில அலுக்காம சொல்றாரு படத்தோட இயக்குநர் நலன்குமாரசாமி.

டைரக்‌ஷனுக்கு என்ன சிலபஸா இருக்கு படிச்சிட்டு வந்து பாஸ் பண்ண? அப்படின்னு கேட்டாலும், ஒரு படத்தை நல்லா எடுக்கறது எப்படிங்கறதைவிட சொதப்பலா ஒரு படத்தை எப்படி எடுக்கக்கூடாதுன்னு சொல்லி சும்மா விளாசித் தள்ளியிருக்கார்.

கருணாகரன் உள்ளிட்ட கதை நாயகர்கள் பங்கேற்ற இந்தக் குறும்படத்தை நீங்களே பாருங்களேன்...