

"புத்தகக் காட்சிக்குப் போகலாம்... நிறைய புத்தகங்கள் இருக்கும்."
"நல்லா சாப்பிடலாம்... டெல்லி அப்பளம் சூப்பராம்!"
"சும்மா சுத்தி பாக்கலாம்... வாங்க பாஸு..."
எதற்காக புத்தகக் காட்சிக்கு வந்திருந்தாலும், அங்கு தென்படும் காட்சிகள் சுவாரஸ்யமானவை.
மகனோடு குதூகலமாகச் சுற்றி வரும் தந்தை...
பை நிறைய புத்தகங்களும், முகம் நிறைய சிரிப்புமாய் வலம் வரும் இளைஞர்கள்...
மாணவர்களோடு வந்திருக்கும் மாநகராட்சிப் பள்ளி டீச்சர்கள்!
நுனிநாக்கு ஆங்கிலத்தில், தமிழ்ப் புத்தகம் பற்றி அலசும் ஆர்வலர்கள்...
களைத்த கால்களோடும், களைப்படையா உள்ளத்தோடும் சீக்கிரம் மொத்த ஸ்டால்களையும் பார்த்துவிடத் துடிக்கும் கல்லூரி மாணவிகள்...
பொறுமையாக, ஒவ்வொரு ஸ்டாலாக நிதானித்து ரசிக்கும் சீனியர் சிட்டிசன்கள்...
செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பதிய வந்த தாரகைகள், அவர்களையும் பார்க்க வந்த ரோமியோக்கள் என பலரும் புழங்கும் புத்தகக் காட்சியால், முக்கிய நோக்கம் நிறைவேறுகிறதா?
யார் யார் எதற்காக வந்தாலும், இத்தனைப் புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்க, வாசிப்பை நேசிக்கும் கூட்டம் கருமமே கண்ணாக, ஸ்டால்தோறும் நுழைந்து, பார்த்து பார்த்து வாங்குகிறது.
அதிக புத்தகங்கள் விற்பதால், அத்தனையும் படிக்கப்படுகிறதென்று எடுத்துக் கொள்ளலாமா?
வாசிப்பை வளர்க்கிறதா இத்தகைய புத்தகக் காட்சிகள்?
புத்தகக் காட்சிகளின் தாக்கம் ஆக்கபூர்வமானதா? விவாதிப்போம் வாருங்கள்!