

ஒபாமா பராக்.. பராக்... என்று தொடங்கியது அமெரிக்க அதிபருக்கான வரவேற்பு. மரபுகளை உடைத்து பிரதமர் நரேந்திர மோடியே விமான நிலையம் சென்றது... ஒன் டூ ஒன் சந்திப்பின்போது 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடல் ஸ்டைலில் உலாவியபடி பேசி மிகுந்த சர்ச்சைகளுக்குள்ளான அணுசக்தி ஒப்பந்த இழுபறிக்கு 'டீல் முடிந்ததது' என சுலபமாக தீர்வு எட்டப்பட்டது...
தூவானத்தை தானே கொடையை பிடித்துக் கொண்டு சமாளித்து குடியரசு தின விழாவில் ஒபாமா கலந்து கொண்டது (அந்த 'படே.. படே.. தேஷோன் மேன்' டயலாக் கவனிக்கத்தக்கது)...
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்ற ஸ்டைலில் அறிவிக்கும் வகையில், 'ஆல் இந்தியா ரேடியோ'வில் முதல் முறையாக அமெரிக்க அதிபரும் - இந்திய பிரதமரும் முதன் முதலாக கூட்டாக உரையாற்றியது...
டெல்லியியில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஒபாமா விருப்பம் தெரிவித்தது... இந்தியப் பயணத்தின் கடைசி நாளின் கடைசி பேச்சினூடே மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி 'ஸ்கோர்' செய்தது...
இப்படி அத்தனை நிகழ்வுகளிலும் இந்தியா - அமெரிக்க நல்லுறவு, இருநாட்டு ஒப்பந்தங்கங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, 'அதுக்கும் மேல..' என சொல்லும் அளவுக்கு 'ஒபாமாவும் மோடியும்' தான் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் எனப் பேசப்படுகிறது.
அமெரிக்க அதிபரின் மூன்று நாள் இந்தியப் பயணத்தை முன்வைத்து, #மோடியும்_ஒபாமாவும் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, நெட்டிசன்களான நீங்கள், உங்களது ஃபேஸ்புக் அல்லது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை சுருக்கமாகவும் 'சுருக்'கெனவும் பதியலாம். (இயன்றால், அந்த இணைப்பை >https://www.facebook.com/TamilTheHindu என்ற 'தி இந்து' இணையப் பக்கத்திலோ அல்லது ட்விட்டரில் >@TamilTheHindu எனச் சேர்த்தோ கருத்தைப் பதியலாம்.
இதில், 'தி இந்து' ஆன்லைன் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகள், உரிய முக்கியத்துத்துடன் தனிப் பகுதியாக வெளியிடப்படும்.
நீங்கள் பயன்படுத்த வேண்டிய ஹேஷ்டேக்#மோடியும்_ஒபாமாவும்