Published : 11 Jul 2019 02:42 PM
Last Updated : 11 Jul 2019 02:42 PM

”ஆறாத ரணம்... நிகரில்லா தலைவன்”: ட்விட்டரில் டிரெண்டாகும் #ThankYouMSD

மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் 18 ரன்னில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. இதனால் உலகக் கோப்பை போட்டியில் இருந்து இந்தியா வெளியேறிய நிலையில், நியூஸிலாந்து அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதுதான் தோனியின் கடைசி உலகக் கோப்பை போட்டி என்பதால் அவரது ரசிகர்கள் பலர் #ThankYouMSD என்ற ஹாஷ்டேக்கில் தோனி குறித்து பாராட்டி பதிவிட்டனர்.

அவற்றில் சில பதிவுகள்...

 

M.Tamilarasan

 

#ThankYouMSD

தோனி ஏன் அழ வேண்டும்?

அவன் முத்தமிடாத கோப்பைகளே இல்லை  

 

குட்டியின் கிறுக்கல்கள்

 

இதுவரை அறியாத ஒரு முகத்தை

நீ மறைத்த, மறைக்க நினைத்த

அந்த முகத்தை நேற்று கண்டுவிட்டோம்....

 

பிகிலு பிரபு

 

ஒவ்வொரு வேல்டு கப் சீரியஸ்லேர்ந்து இந்தியா வெளியேறும் போதும்

ரசிகர்கள கோவத்துல சச்சின் கங்குலி வீட்ல கல் எரிவாங்க...

 

ஆனா இந்த தடவ...

 

உலகமே ஒரு மனுஷனுக்காக வருத்தப்படுது.....

 

எவனோ ஒருவன்...

 

 

போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்... இந்த பயணத்தில் தன் நாட்டிற்காக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விட்டாய்...யார் என்ன கூறினாலும் என் சுவாசம் உள்ளவரை உனை நான் நேசிப்பேன்.

 

Dheenamutharasu

ஆறாத ரணம்     

நிகரில்லா தலைவன்

 

கோ. கார்த்திக் பாரதி

 

 

தோல்வியோ வெற்றியோ...ஆனால் போராடு!! #ThankYouMSD

 

Jack Sparrow

 

எழுதி வைங்கடா வரலாற்றுல    

 

தன்னோட கடைசி match வரைக்கும் இந்தியாவுக்காக போராடியே சென்றார் என்று    

 

ஆனா..

 

முடிவு நாம எதிர்பார்த்தது மாதிரி இல்ல

 

Kartheeswaran

 

தோனி இருக்கிறார்

ஜெயித்து விடுவோம்

என்று சொல்லிய

கடைசி தலைமுறை!

 

கேபிள் ராஜா

 

நேத்து ஆடுனது கடைசி மேட்ச்சான்னு தெர்ல... ஆனா ஹேட்டர்ஸ கூட கடைசி வர நம்ப வச்சுட்டு இருந்தான் தலைவன்... believer

 

Autorider

 

இந்திய கிரிக்கெட் அணியோட அடுத்த 4 தலைமுறைகளுக்கான தேடல் இன்னொரு தோனியாக மட்டுமே இருக்கும்.

Kailash

எத்தனை சச்சின் கோலி வேணா திரும்ப வரலாம்..

ஆனா ஒரு விக்கெட் கீப்பரா பெஸ்ட் பினிஷரா பெஸ்ட் கேப்டனா இது எல்லாத்துலயும் தோனி ஒருத்தரை தவிர எவனும் வர முடியாது  ..

Sampath Kumar Shanmugam

 

என்றும் உன்னை மறவோம் தோனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x