Published : 06 Jul 2019 02:25 PM
Last Updated : 06 Jul 2019 02:25 PM

நெட்டிசன் நோட்ஸ்: ராட்சசி - சாட்டை

கெளதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள 'ராட்சசி' படம் திரைக்கு வந்துள்ளது.

இப்படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன்  நோட்ஸில்...

எமதாயி னுமது

#ராட்சசி - தலைப்பில் இருந்தே தொடங்கும் புரட்சி... படம் முழுக்கப்பயணிக்கிறது.

 

மூடநம்பிக்கை, சாதி ஒழிப்பு,  பொதுவுடைமை,  போராட்ட குணம்,  அன்பு,  காதல், சமத்துவம் என அனைத்து தளங்களிலும்...

 

இரா.சரவணன்

 

அரசுப்பள்ளியின் அவலத்தை சொல்கிற கதை... ஆனாலும்,

நெருக்கடி கடந்து, தேவைகளைப் போராடிப் பெற்று, மாணவர்களை மாற்றி, அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்துகிற ஆசிரியர்கள்  புரட்சியாளர்களுக்கான சமர்ப்பணமாகி இருக்கிறது #ராட்சசி படம். போர்க்குரலாக ஒலிக்கும் ஜோதிகாவின் நடிப்பு.. நடிப்பல்ல புரட்சி!

 

Mohamed Haja Kamil

 

தரமான குடும்ப சித்திரம்.

 

Mr. பார்த்த கதை எனும் குறைய‌ தவிர படம் உண்மையாகவே நல்லாருக்கு. பெரும்பலான சீன்கள் கைதட்டல் வாங்குது‌.

 

Josephine J

 

படம் சிறப்பாக உள்ளது. சரியான நேரத்தில் சரியான படம்

 

சிவா கலகலவகுப்பறை

 

 

அன்பான ராட்சசி!

 

எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் அரசுப்பள்ளியைத் தேர்ந்தெடுத்து வேலைசெய்ய வரும் தலைமையாசிரியை.

முரட்டுத்தனமானவள்.

குழந்தை நேயமானவள்.

 

ஆசிரியர்களை மட்டும் வருத்தப்பட வைக்கும் காட்சிகள் இருக்கின்றன.

அவற்றிற்கு திரையரங்கில் கைதட்டல் கிடைப்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

 

ஆசிரியருக்கு ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய கவலையே இல்லாமல் இப்படி எடுக்கலாமா? என்று கோபப்படுபவர்களின் பதிவுகளும் கவனிக்கப்பட வேண்டியவை.

 

அப்படியான விமர்சனங்கள் புதியவையும் அல்ல. பொதுமக்களிடையே பேசப்படுபவை.

குறைகள் என்று ஒதுக்கிவிடாமல் இவற்றிலிருந்து ஆசிரியர்களுக்கிடையே கலந்துரையாடல்கள் நிகழ்வது அவசியம். அவை அரசுப்பள்ளிகளின் மறுமலர்ச்சியை இன்னும் விரைவாக்கும் என்று தோன்றுகிறது.

 

அரசுப்பள்ளிகளைச் சீரழிக்கும் உள் வேலைகளைச் செய்துவிட்டு ஆசிரியரை மட்டுமே குற்றவாளி ஆக்கும் அரசின் செயல்பாடுகள் குறித்த பேச்சுகள் ஆசிரியரிடமிருந்தே எழவேண்டும். அது மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும்.

 

படத்தின் சில குறைகளை பல நிறைகளுக்காக விட்டுவிடலாம் அல்லது அவற்றையும் பேசலாம். அதைக் காரணம் காட்டி, சினிமா தானே என்று ஒதுக்கி விடலாம். ஆனால், இப்படம் பொதுமக்களிடையே ஏற்படுத்தும் உரையாடல் முக்கியமானதாக இருக்கும்.

 

ராணுவப் பின்புலம் ராட்சசிக்கு வலிமை சேர்க்கலாம். தமிழகமெங்கும் குழந்தைகள் சார்ந்து, ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று செயல்படும் ஏராளமான ஆசிரிய ஆசிரியைகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த உரையாடல்களின் வழியே கல்வி பற்றிய பல திரைப்படங்களை எடுக்க இயலும்.

 

தமிழகமெங்கும் குழந்தைகள் நலன் சார்ந்து இயங்கும் ஆசிரியர்களின் அனுபவங்கள், 'கனவு ஆசிரியர்' நூலில் இடம்பெற்ற பொன்னீலனின் அனுபவம், Lean on me என்ற பெயரில் படமாக்கப்பட்ட ஜோ கிளார்க் கின் அனுபவம், பாரதி தம்பியின் வசனங்கள், ஜோதிகாவின் நடிப்பு, கௌதம்ராஜின் இயக்கம் ஆகியவை ராட்சசிக்கு வலிமை சேர்த்துள்ளன.

 

ஆசிரியர்களிடையே விமர்சிக்கப்பட வேண்டியவள் ராட்சசி.

 

 

Marabin Oli

 

தமிழக அரசு பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த எந்த மாற்றத்தையும் இந்த படம் கருத்தில் கொண்டே இந்த படம் என்பது எந்தவிதத்திலும் நம்முடைய  மனதிற்கு இப்போது நெருக்கத்தில் இருக்கக் கூடிய படமாக அமையவில்லை. ஜோதிகா  அவர்களுடைய நடிப்பு படத்திற்கு போதவில்லை.

 

வி.ஐ.பி

 

 

சாட்டை அடுத்த பார்ட் ல ஜோ நடிச்சிருக்காங்க போல.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x