முத்தம்

முத்தம்
Updated on
1 min read

முத்தம்

வெளிப்படும்போது

ஒரு முத்தமாகத்தான்

வெளிப்பட்டது

பிரபஞ்சம்

*

அது

முத்தத்தின் உதடுகளிலிருந்து

இன்னொரு

முத்தத்தை நோக்கிப்

போய்க்கொண்டிருக்கிறது

*

முத்தத்தின்

மறுமுனை

எல்லையின்மையில்

காத்திருக்கிறது

*

எல்லையின்மையும்

ஒரு முத்தம்தான்

*

இருப்பது

அந்த ஒரே

முத்தம்தான்

*

நாமெல்லாம்

அதன்

ஒலிகள்

- ஆசை

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in