இணையத்தில் வைரலாகும் ரஜினியின் முதல் செல்ஃபி வீடியோ

இணையத்தில் வைரலாகும் ரஜினியின் முதல் செல்ஃபி வீடியோ
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்தின் முதல் செல்ஃபி வீடியோ சமூக ஊடகங்களிலும், இணையத்திலும் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் தன்னுடைய வழக்கமான உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கே அவர் முதன்முதலாக தனது செல்ஃபி வீடியோவை எடுத்துள்ளார். நல்ல உடல் நலனுடன் அவர் இருப்பது அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

வீடியோவில் தன் ஓட்டுநருடன் ஃபெராரி காரில் வலம் வருகிறார் ரஜினிகாந்த். அப்போது ''இந்த ரெட் லைட்டைதானே ஆன் பண்ணணும்?'' என்று அவரிடம் கேட்கிறார் ரஜினி.

இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏராளமானோர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

'மொபைல் போன் குறித்து அதிகம் தெரியாதபோதும், எந்திரன், கோச்சடையான், 2.0 உள்ளிட்ட படங்களை சாத்தியமாக்கியவர் ரஜினி. 'அரசியலுக்கு வாருங்கள் இல்லையெனில் நடிக்கச் செல்லுங்கள், மக்களின் நேரத்தை வீணாக்காதீர்கள்!' உள்ளிட்ட ஏராளமான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த வீடியோவை ரஜினியின் ரசிகர் ஒருவர் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வீடியோவைக் காண:

</p>

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in