Published : 09 Feb 2017 11:44 AM
Last Updated : 09 Feb 2017 11:44 AM

நெட்டிசன் நோட்ஸ்: ஜல்லிக்கட்டு- காளையாடும் பாலமேடு!

தமிழக இளைஞர்களின் அறப்போராட்டத்துக்குப் பிறகு ஜல்லிக்கட்டு அனுமதி கிடைத்த நிலையில் முன்னதாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ட்விட்டரில் >#palamedu என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி முன்னிலை வகித்து வருகிறது, அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

Karthik Alagarsamy ‏@karthik7_a

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு. சாதித்த திருப்தி வந்திருக்கிறது. #banPETA

கோதை ‏@umakrishh

#Palamedu மதுரை மாவட்டத்தில் சிறு கிராமம் பாலமேடு. இன்னிக்கு டிவிட்டர்ல ட்ரெண்ட் ஆகுது. தமிழர்களின் தைப்புரட்சி.

புனிதன் ‏@simiveera

பாலமேட்ல ஜல்லிக்கட்டு, அரசியல் இன்னிக்கு வரும் நாளைக்கு போகும். ஜல்லிக்கட்டு நம்ம அடையாளம் #Palamedu

vinoth kumar ‏@vinu__vinoth

#palamedu சிங்கம் காளையை அடக்கும் இடம். #jallikattu

prakash ‏@prakasgmech

இந்தியா வங்க தேச டெஸ்ட் போட்டியை விட பாலமேடு ஜல்லிக்கட்டு பார்க்க அருமையாக இருக்கிறது. உண்மைதானே!

villangaseithi ‏@mualimgm

அதிமுகவில் நடைபெறும் மல்லுக்கட்டுக்கு இடையே பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள் சீறி பாய்ந்தன!

Senthil ‏@Senthil92217370

தமிழனின் வீரம் தெறிக்கும் பாலமேடு.

Pon Radhakrishnan @PonnaarrBJP

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது குறித்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கு வாழ்த்துகள்.

durais ‏@duraiis

தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள்! ஒண்ணு பதவிக்கு இன்னொன்னு பண்பாட்டுக்கு. #TnPolitics #palamedu.

Mohamed Nazeer

ஒரு நல்ல விஷயம்; ஜல்லிக்கட்டு தொடங்கிவைக்க உரிமையில்லாத அரசியல்வாதிகள் யாரும் வரவில்லை.

Venki Rko

- பாலமேடு ஜல்லிக்கட்டு

- சிங்கம் 3

- இந்தியா - பங்களாதேஷ் டெஸ்ட்

- பன்னீர் - சசிகலா 2ம் நாள் போர்

- சாக்லேட் டே

எதைதான் நாங்க பார்க்கறது?

மன்னாதி மன்னன் ‏@neps2016

பாலமேடு ஜல்லிகட்டில் காளையை அடக்குபவர்களுக்கு ராயல் என்ஃபீல்ட் பைக் பரிசு. கலக்குங்க மக்கா..!

Madras Memoirs ‏@MadrasMemoirs

அவனியாபுரத்துக்குப் பிறகு பாலமேடு.. 3 வருட இடைவெளிக்குப் பிறகு ஜல்லிக்கட்டு! களிப்பூட்டும் காட்சிகளைப் பார்க்கிறேன்.

Joe Selva ‏@joe_selva1

பாலமேடு ஜல்லிகட்டு பேரவை தலைவர் பி.ஆர்: 2 மாடு பிடிபடல, 2 மாட்டுக்கும் LED TV மற்றும் பல பரிசுகள்.

Danny ‏@Liben_Danny

உண்மை தமிழன் கிரிக்கெட் பார்க்கறத விட்டுட்டு ஜல்லிக்கட்டு பார்ப்பான்.

Shanmuga Nathan ‏@crshanmuga

காளையாடும் பாலமேடு!

Dhans ‏@dhans4all

இன்னிக்கு அரசியல்வாதிகள் யாருமே இல்லாம மாணவர்கள் நினைத்த ஜல்லிக்கட்டு நடக்குது. கடவுள் இருக்கான் கொமாரு.

மன்னாதி மன்னன் ‏@neps2016

4 வருஷம் பொறுத்து பார்த்துட்டு உலகமே மெச்சுற அளவுக்கு அறப்போராட்டம் நடத்தி ஜல்லிக் கட்டை மீட்டெடுத்தோம்..பாலமேடு பெருமை. மகிழ்ச்சி..!

D S Gauthaman

பாலமேடு சல்லிக்கட்டு மிக நேர்த்தியாகவும், ஒழுங்கோடும், விறுவிறுப்பாகவும் நடக்கிறது. காளைகளின் பாதுகாப்பிலும் கவனத்தோடு இருக்கிறார்கள். மாணவர்கள் போராடிப் பெற்றதை இழந்துவிடக் கூடாதென்பதையும் மைக்கிலேயே அறிவுறுத்துகிறார்கள். விழாக்கமிட்டிக்கு பாராட்டுகள். போராடிப்பெற்ற மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x