Published : 31 Mar 2017 01:17 PM
Last Updated : 31 Mar 2017 01:17 PM

யூடியூப் பகிர்வு: அதிரவைக்கும் பெண் சிசுக்கொலைகள்!

மாறி வரும் சமூகத்தில் ஆணுக்கு இணையாகப் பெண்கள் எல்லாத் துறைகளிலும் கால் பதித்துவிட்டனர். ஆனால் இன்னும் பெண் சிசுக்கொலைகள் நடந்த வண்ணமே இருக்கின்றன.

மகாராஷ்டிராவின் சங்லி மாவட்டத்தில் கருச்சிதைவு செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட 19 பெண் சிசுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி, சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இன்னும் ஏராளமான பெண் சிசுக்கொலைகள் மகாராஷ்டிரத்தில் நடந்துவருகின்றன. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 1095 பெண் சிசுக்கள் கொல்லப்படுகின்றன என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

அங்கே பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிய ஏஜெண்டுகள் உதவுகின்றனர். மருத்துவருடன் ரகசியத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் ஏஜெண்ட், என்ன குழந்தை என்பதைக் கண்டறியும் பரிசோதனை முடிவைத் தெரிந்துகொள்கிறார். அவை அனைத்தும் குறியீட்டு முறைமைகளிலேயே பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.

மருத்துவர் 'கணபதிபாப்பாமோரியா' என்று சொன்னால் ஆண் குழந்தை, 'தேவி 'என்று கூறினால் பெண் குழந்தை. '9-வது வார்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்' என்றால் [9 என்ற எண் g(irl) என்ற எழுத்து வடிவில் இருப்பதால்] பெண் குழந்தை. '6-வது வார்டுக்கு' என்றால் [6 - b(oy) பையன்] ஆண் குழந்தை. இதுபோன்ற இன்னும் சில சமிக்ஞைகள் நம்மை அதிர்ச்சியில் தள்ளுகின்றன.

இவை அனைத்தையும் உள்ளடக்கியுள்ள குறும்படம் உங்கள் பார்வைக்கு...