Published : 14 Mar 2017 03:10 PM
Last Updated : 14 Mar 2017 03:10 PM

நெட்டிசன் நோட்ஸ்: முத்துக்கிருஷ்ணன் மரணம்- படிக்கும் இடத்தில் பாரபட்சமா?

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருந்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணமடைந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், இதுகுறித்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன. #JNU என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

>Sindhan Ra

தமிழக மருத்துவ மாணவர் சரவணனை இழந்தோம், நஜீபை இன்னுமே தேடுகிறோம். வெமுலா நம்மோடு இல்லை. கார்கில் வீரரின் மகளை பலாத்கார மிரட்டலுக்கு ஆளாக விட்டோம், உமர் காலித் விரட்டப்படுகிறார். கன்னையா குமார் மீது அவதூறு செய்கிறார்கள். இப்போது?

>Jothimani Sennimalai

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணனின் சந்தேகத்திற்கிடமான மரணம் தீர விசாரிக்கப்பட வேண்டும். தமிழக அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்தவேண்டும்.

Balaji Thirumoorthy

உயர் கல்வி நிறுவனங்களில் கற்று உயர்ந்த இளைஞர்கள் சாதிய பாகுபாடுகளினால் இன்றைக்கும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். சக தோழர்களிடம் இருந்து அன்பையும், சமத்துவத்தையும் மட்டுமே அவர்கள் விரும்புகிறார்கள். அதைப் பெறுவதில் போராடிக் களைத்தவர்கள் நிரந்தரமாக மவுனித்துவிடுகிறார்கள்.

>Mohan Thirunavukkarasu

கல்வியே சமூக ஏற்றத்தாழ்வு நீங்குவதற்கான முக்கிய கருவி. ஆனால், நாட்டின் முக்கிய கல்வி நிறுவனமான ஜே.என்.யூவிலேயே நிலவும் சாதி, மத ஏற்றத்தாழ்வுகள் சமூகப் புற்றுநோயின் அறிகுறி. சமூக அக்கறையற்ற கட்சிகள் இருக்கும் வரை நோய் தீரப்போவதுமில்லை, மக்கள் திருந்தப்போவதுமில்லை, முத்துக்கிருஷ்ணன்கள் வாழப் போவதுமில்லை...

ஆன்டனி வளன்

மரணித்தவன் ஒரு சக மனிதன் என்னும் அளவில், எல்லோருக்கும் வருத்தம் இருக்கிறதா? அல்லது செத்தான் ஒரு தலித் என்ற வன்மம் உங்கள் மனங்களின் உள்ளே ஒளிந்திருக்கிறதா? மனசாட்சியோடு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிக் கொள்ளுங்கள்....

தலித்திய விடுதலை என்பது தலித்துகளால் மட்டுமே சாத்தியம் இல்லை. மாறாக தலித் அல்லாதவர்களின் உள்ளங்களில் ஏற்படும் உண்மையான சமத்துவ சிந்தனை மாற்றத்தால் மட்டுமே சாத்தியம்..

Tharagai Bala

சமத்துவம் மறுக்கப்படும்போது அனைத்தும் மறுக்கப்படுகிறது: தற்கொலை செய்து கொண்ட ஜே.என்.யூ மாணவரான தமிழர் முத்துக்கிருஷ்ணனின் கடைசி முகநூல் பதிவு.

Kaavs Arunachalam

மீனவ இளைஞன் பிரிட்ஜோவை நாம் இன்னும் மறக்கவில்லை அதற்குள் மற்றொரு தமிழரா? எய்ம்ஸ்க்கு மருத்துவர் சரவணன். ஜே.என்.யூ வுக்கு முத்து கிருஷ்ணன்?

Eshwar Eshwaran

திரும்பவும் ஒரு ரோகித் வெமுலா சம்பவம் போல ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நடந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது... படிக்கிற இடத்திலயும் பாரபட்சம் பார்ப்பது மிகுந்த வேதனையாகயிருக்கிறது...

digvijaysinh

ஏன் ஜேஎன்யு மாணவர்களிடம் இருந்து மட்டும் பிரச்சினைகள் எழுகிறது? பிரச்சினை அரசிடம் அல்ல; அவர்கள் (மாணவர்கள்) மனதிலே இருக்கிறது.

>Keerthi Selvam‏

சமத்துவம் இல்லாமையைப் போக்க முயன்றவர் முத்துக்கிருஷ்ணன்.

>Gowthami Boopalan

எங்கள் தலைமுறையின் அறிவுஜீவுகள் அங்கே உருவாகிறீர்கள் என்ற பெரு நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம். உங்கள் கட்டுரைகளும், ஆய்வுகளும், ஆய்வேடுகளும் சமூகத்தின் பிரச்சினைகளை அதன் வேரிலிருந்து ஆய்வு செய்து, புரட்டுகளைப் புரட்டிப் போடும்போது உங்களைப் பெற்ற பேற்றைப் பெற்று மகிழ்கிறது நம் சமூகம்.

நீங்கள் உரித்துத் தொங்கவிட இந்த சமூகத்தில் கொடுமைகள் இருக்கின்றன. இன்று அவை உன்னைத் தொங்க விட்டிருக்கின்றன. தொடர்ந்து நடக்கும் இவை தற்கொலைகளல்ல... தற்கொலைக்குத் தூண்டி, தற்கொலை நோக்கித் தள்ளிவிடப்படும் கொலைகள்!

>மெத்த வீட்டான்‏

டெல்லி ஜேஎன்யூ-வில் படித்த தமிழக மாணவர் தற்கொலை- மர்ம மரணம் என்று பெற்றோர்கள் குற்றச்சாட்டு.

அது பல்கலைகழகமா இல்லை

"கொல்"கலை பழகும் கழகமா?

>Sivaraman PK‏

பெத்தது ஒரு மகன் அவனையும் காவு கொடுத்தாச்சு, மூணு அக்கா, தங்கையை அனாதைகளாக விட்டு சென்றார் முத்துக்கிருஷ்ணன்.

>Paal Nilavan

கொலையா தற்கொலையா? தெரியவில்லை.. ஆனால் சமத்துவம் இல்லை என்பது மட்டும் தெரிகிறது. எல்லோரும் சமம் என்கிற நிலை வெகு இயல்பாக மலரவேண்டிய கல்விச்சாலைகளிலும் கோளாறு.அப்படியென்றால் சமநிலை இல்லாத சமூகத்தில் நிகழவேண்டிய மாற்றங்களுக்கு இன்னும் எவ்வளவுகாலம் பிடிக்கும்? ரோஹித் வெமுலாவைத் தொடர்ந்து இன்று முத்துக்கிருஷ்ணன்... இந்தத் தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அவசர அவசியத்தை உணரப்போகும் அரசு எது? சமூகம் எது? மனித மனங்கள் எங்கே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x