Published : 10 Aug 2016 10:22 AM
Last Updated : 10 Aug 2016 10:22 AM

சிலை சிலையாம் காரணமாம் - 25: சிவன்கூடல் சோமாஸ்கந்தர் சிலை!

சோமாஸ்கந்தர் ஐம் பொன் சிலை ஒன்றை சிங்கப்பூர் ‘ஏசியன் சிவிலைசேஷன் மியூசியம்’ 2002-ல் சுபாஷ் கபூரிடம் இருந்து விலைக்கு வாங்கியது. ஸ்ரீபெரும்புதூர் அருகே சிவன்கூடல் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலுக்குச் சொந்தமானது இந்தச் சிலை. சிதிலமடைந்த நிலையில் இருந்த அந்தக் கோயிலில் இருந்து சிலை திருடுபோனது யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில், 1916-ல் வெளி யிடப்பட்ட புத்தகம் ஒன்றில் சிவன் கூடல் சோமாஸ்கந்தர் சிலையும் பிரசுரமாகி இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. இதை, ஆதாரமாக வைத்து அந்தச் சிலை சிவன் கூடல் கோயிலுக்குச் சொந்த மானது என்பதை உறுதிப்படுத் தியது ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ அமைப்பு. பிரெஞ்சு ஆய்வு நிறுவனமும் அதை உறுதிப் படுத்தியது. இந்த இடத்தில் புதுச் சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தைப் பற்றி சொல்லி யாக வேண்டும். நமது கோயில் களில் உள்ள சிலைகளைப் பற்றி நமது அரசாங்கங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஆனால், பிரெஞ்சு அரசு நமது தொன்மை யான பாரம்பரிய சின்னங்களை ஆவணப்படுத்தத் தேவையான நிதியை ஒதுக்கி தன்முயற்சியாக செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் தமிழகம், ஆந்திரம், புதுச்சேரி, ஒடிஷா, கர்நாடகம், கேர ளம் மாநிலங்களின் தொன் மையான கோயில் களில் உள்ள சுவாமி சிலைகள் மற்றும் கலைப் பொக்கிஷங் களைப் புகைப்படத் தொகுப் பாக பாதுகாத்து வைத்திருக் கிறது. தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவரும் இந் தப் புகைப்படத் தொகுப்பில், சுமார் 1 லட்சத்து 61 ஆயிரம் புகைப் படங்கள் உள்ளன. இதில், தமிழகம் சார்ந்தது மட்டுமே 80 ஆயிரம் படங்கள். தமிழகத்தில் இருந்து சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்டவர்களால் கடத்தப்பட்ட ஐம்பொன் சிலைகள் வெளிநாடு களில் பிடிபட்டபோது, அவை தமிழ கத்து சிலைகள்தான் என்பதை உறுதிப்படுத்த பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் ஆவணங்களே பெரிதும் உதவின. இந்நிறு வனம் அளிக்கும் சான்றுகளை ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முக்கிய ஆவணமாக எடுத்துக்கொள் கின்றன.

இதுகுறித்துப் பேசும் பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின், கோயில் களுக்கான ஆராய்ச்சியாளர் முனைவர் முருகேசன், ‘‘1956-ல் இருந்து இந்தப் பணியை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். துறை சார்ந்த வரலாறுகளை எழுது பவர்களுக்கு உதவுவதற்காகத் தொடங்கப்பட்டது இந்த முயற்சி. நடராஜர் சிலை என்று சொன்னால் அது எத்தனை இடங்களில்? எத் தனை வகைகளில் உள்ளது என் பதை எங்களிடம் உள்ள ஆவணங் களை வைத்துச் சொல்லிவிட முடியும்.

சிலைகள் பற்றிய நுணுக்க மான படங்கள் இருப்பதால் ஒப் பிட்டுப் பார்த்து அசலையும் நகலை யும் துல்லியமாகச் சொல்லி விடுவோம். விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் சிலை இருந் ததை 1974-ல் நாங்கள் ஆவணப் படுத்தியிருக்கிறோம். ஆனால், சுபாஷ் சந்திர கபூர் அதை 1970-ல் விலைக்கு வாங்கியதாக போலி யான ரசீது தயார்செய்து வைத்திருந்தார். எங்களது ஆவணம் இல்லாது போயிருந் தால் அர்த்தநாரீஸ்வரர் சிலையை மீட்டுவருவதே சிரமமாகி இருக் கும்’’ என்றார்.

அதிகாரிகளின் அலட்சியம்

ஸ்ரீபுரந்தான் கோயில் விநாய கர் சிலை அமெரிக்காவின் டொலைடோ மியூசியத்தில் இருப் பது 2012-லேயே உறுதிப்படுத் தப்பட்டுவிட்டது. இந்தியாவில் இருந்து கபூரால் கடத்தி வரப்பட்ட சிலைகள் உள்ளிட்ட பழமையான பொருட்கள் அந்த மியூசியத்தில் அதிகளவில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, மியூசியத்தில் இருந்த சில சிலைகளைக் குறிப்பிட்டு அவை யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்ற விவரத்தைத் தெரிவியுங்கள்’ என்று அங்குள்ள தன்னார்வலர்கள் 2013 ஜூலையில் மியூசியம் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார்கள்.

இந்த விவகாரம் மீடியாக் களிலும் எதிரொலித்ததை அடுத்து, தங்களது மியூசியத்தில் இருந்த ஸ்ரீபுரந்தான் விநாயகர் சிலையை ஒப்படைக்கவும் இந்தியாவில் இருந்து கடத்திவரப்பட்ட சிலை களை அடையாளம் காண்பதற் கும் உதவிடும்படி டொலைடோ மியூசியத்தின் இயக்குநர் பிரைன் பி.கென்னடி, நியூயார்க்கில் உள்ள இந்திய கலாச்சாரப் பேரவைச் செயலர் சுகந்த் ராஜாராமுக்கு 2013 ஜூலை 24-ல் கடிதம் எழுதி னார். ஏழு மாதங்கள் ஆகியும் அதற்கு பதில் வரவே இல்லை.

இதையடுத்து, 2014 பிப்ரவரி 14-ல் இந்திய தூதர் ஜெய்சங் கருக்கு கடிதம் எழுதினார் கென் னடி. இதற்கும் ஆறு மாதங்கள் வரை பதில் இல்லை என்றதும், அந்த இரண்டு கடிதங்களையும் தங்களது இணையத்தில் வெளி யிட்டது மியூசிய நிர்வாகம். அத்துடன், கபூரால் தங்களுக்கு அன்பளிப்பாகத் தரப்பட்ட சிலை கள் உள்ளிட்ட 200 பொருட் களையும் 1998-ல் கபூர் தங்களுக்கு விற்ற ‘வராகா’ சிலையையும் 2014 டிசம்பர் 20-ல் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸ்வசம் ஒப்படைத்துவிட்டது மியூசியம். இந்நிலையில், கடந்த ஜூனில் நியூயார்க் சென்றிருந்த இந்திய பிரதமர் மோடியிடம் ஸ்ரீபுரந்தான் விநாயகர் சிலை ஒப்படைக் கப்பட்டது.

இதேபோல், நியூயார்க்கில் தனியார் கலைப் பொருள் டீலர் ஒருவர் ஸ்ரீபுரந்தான் கோயிலுக்குச் சொந்தமான மாணிக்கவாசகர் சிலையை தாமாக முன்வந்து போலீஸில் ஒப்படைத்தார். அரியலூர் மாவட்டம் தீப்பாம்பா புரம் கோயிலுக்குச் சொந்தமான சிவிகை நாயகர் என்ற ஆலிங் கனமூர்த்தி ஐம்பொன் சிலையை அமெரிக்காவில் உள்ள பால்ஸ் டேட் யுனிவர்சிட்டி மியூசியத்துக்கு ஏப்ரல் 2015-ல் விற்ற கபூர், அதை அமெரிக்காவைச் சேர்ந்த லியோ எஸ்.ஃபிகல் என்பவரிடம் இருந்து 1969-ல் வாங்கியதாக போலி ஆவணமும் கொடுத்திருந்தார். கபூரின் வண்டவாளங்கள் வெளியானதுமே, அந்தச் சிலையை சுங்கத்துறையிடம் ஒப்படைத்துவிட்டது பால்ஸ்டேட் மியூசியம்.

- சிலைகள் பேசும்... | ‘The India Pride Project' உதவியுடன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x