

தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ, புக்ஸ் ஃபார் சில்ட்ரன் வெளியீடு, ஒவ்வொன்றும் ரூ.30, 16 புத்தகங்கள் ரூ. 480க்குப் பதில், ரூ.400க்கு விற்கப்படுகிறது, தொடர்புக்கு: 044-24332424
குழந்தைகளுக்கான புத்தகங்கள் அனைத்து வயதினருக்கும் குதூகலம் தருபவை. இரு அட்டைப் பக்கங்களுக்கு இடையில் இயங்கிக்கொண்டிருக்கும் மாய உலகங்கள் அவை.
16 சிறிய புத்தகங்கள் கொண்ட இந்தத் தொகுப்பில், ‘ஆப்பிள் ஜானி’, ‘சிங்கத்தின் குகையில் சின்னக் குருவி’, ‘எலி எப்படிப் புலியாச்சு?’, ‘ராஜாவின் காலடி’என்று சுவாரஸ்யமான தலைப்புகளில் கதைகள் உள்ளன.
ஆங்கில மூலமும், தமிழ் மொழிபெயர்ப்பும் ஒரே பக்கத்தில் இடம்பெறுவது தனிச்சிறப்பு. அழகான, செறிவான கோட்டுச் சித்திரங்கள் குழந்தைகளின் கற்பனைக்கு மெருகூட்டும்.