Published : 29 Jun 2015 17:29 pm

Updated : 13 Jun 2017 13:48 pm

 

Published : 29 Jun 2015 05:29 PM
Last Updated : 13 Jun 2017 01:48 PM

ட்வீட்டாம்லேட்: ஹை.. அய்யோ.. சென்னை மெட்ரோ செல்ஃபி பார்வைகள்!

சென்னைவாசிகள் ஆவலுடன் எதிர்பார்த்த மெட்ரோ ரயில் சேவை ஒருவழியாக தொடங்கிவிட்டது. ஆலந்தூரிலிருந்து கோயம்பேடு வரை ஓடிக்கொண்டிருக்கும் மெட்ரோவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று அதன் பாசிடிவ், நெகடிவ் விஷயங்களை டிவிட்டரில் கொட்டி வருகின்றனர். அவர்களது மெட்ரோ பயண விருப்பம் மற்றும் எதிர்பார்ப்புகளை எடுத்துரைக்கும் ட்வீட்டாம்லேட் இன்று.

Follower™ ‏@Thala_Twitts - இன்று முதல்..மெட்ரோ ரயிலில் தனது காதலியின் பெயரை எழுதி ஹார்டின் போட்டு அம்பு விடுவான் ரயில் மாணவன்! #ChennaiMetro


Guruprasath ‏@guroosmedia - கட்டணம் அதிகமாக உள்ளது. காரில் செல்பவர்கள் இதில் பயணம் செய்வார்கள். மற்றபடி, பேருந்து பயணவாசிகளின் நிலைமையை மாற்றாது இது.

Panner Junior ‏@pannerkrishna - இனிமேல் நம்ம ஊர்ல மெட்ரோ ரயில் இல்லேன்னு யாரும் சொல்ல முடியாது.

Maseeh Ur Rahmaan ‏@maandivi - சார் இந்த வழி எந்தப் பக்கம் போகுது...கேட்டுகிட்டே இருப்பாய்ங்க...#ChennaiMetro

G.Ananthakrishnan ‏@ganant - ஆலந்தூர், ஜிஎஸ்டி, அண்ணா ரவுண்டானா, கோயம்பேடு பேருந்து நிலையங்கள் செல்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். ஆனால் இந்த ஆலந்தூருக்கு எப்படி போறது? எம்டிசி வழி எக்ஸ்ட்ரா சர்வீஸ் விடுமா?

Raj Kumar ‏@themmcgooner - சீசன் டிக்கெட்டெல்லாம் இல்லையாம்.

இளநி வியாபாரி ‏@MrElani - நல்லவேள மெட்ரோவுல ஜன்னல் வைக்கல. இல்லனா கீழ ரோட்டுல போறவங்க மண்டைபூரா பான்பராக் தான்.

durais ‏@durais - என்னவோ செல்பி எடுக்குறதுக்கு தான் இந்த மெட்ரோ ரயில் விட்டா மாதிரி! ரெண்டு மூணு நாளைக்கி இந்த #ChennaiMetro செல்ஃபி தொல்ல தாங்காது!!

Sk ‏@skclusive - 'அதிக டிக்கெட் விலை' - அதிகப்படியான கும்பல் கூடிவிடாமல் இருப்பதற்காகவும் இருக்கலாம். load balance-லாம் டெஸ்ட் பண்ண வேண்டாமா. :-) #சென்னைமெட்ரோ.

வெங்கி ‏@VenkysTwitts - சென்னை மெட்ரோ ரெயிலில் 1276 பேர் பயணம் செய்யலாம். # கூடவே டிக்கெட்டும் எடுக்கணுமாம்!

தி.கார்த்தி ‏@seeyouattop - கோயம்பேடு - கிண்டி மார்க்கத்தில் இத்தனை ஆண்டுகளாக சேவை அளித்த ஷேர் ஆட்டோக்களுக்கு நன்றி.

ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - திமுக தான் கொண்டு வந்துச்சு! இல்ல அதிமுக தான் கொண்டு வந்துச்சு! அதெல்லாம் இருக்கட்டும் டிக்கெட் 40 ரூவாயாம். காசு கொண்டு வந்துருக்கியா? #மெட்ரோ.

ATHISHA 2:11:11 ‏@athisha - மெட்ரோ ரயிலுடன் திமுகவையும் ஸ்டாலினையும் இணைத்துப் போடப்படும் ட்வீட்டுகளில் இரண்டு சொட்டுக் கண்ணீரும் சேர்ந்தேயிருக்கிறது!

நாட்டுப்புறத்தான் ‏@naatupurathan - மாப்ள இவர் தான். ஆனா இவர் போட்ருக்ற சட்ட இவரோடது இல்ல...!!!

b ‏@bri2o - நாம செஞ்ச வேலைக்கு மேனேஜர் பாராட்டு வாங்கறதில்லையா...அப்புடி தான் மெட்ரோவும்.

நேத்ரா அப்பா ‏@SankarShri - சென்னை மெட்ரோ ரயில் இன்று துவக்கம்..."இங்கு எச்சில் துப்பாதீர்கள்"-னு திரும்புற எடமெல்லாம் எழுதி வைச்சா தான் ட்ரெயின் கலர் மாறாம இருக்கும்.

டுலா ‏@iMsoundu - இவ்வளவு நாளா திறக்கலைனு திட்டுனாங்க இப்ப திறந்ததுக்கும் திட்டுறாங்க. ஊப்ஸ் #சென்னைமெட்ரோ.

வாழவந்தார் ‏@Iam_SuMu - இனி வெள்ளிக்கிழமை ஊருக்குபோக கோயம்பேடு போறது ரொம்ப ஈஸி! நோ லட்சுமண் ஸ்ருதி, வடபழனி சிக்னல்ஸ், டிராபிக் தலைவலிகள்! #மெட்ரோ.

பசி.! ‏@Pa_Siva - கலைஞர் என்ற ஒரே தலைவரால் கட்டமைக்கப்பட்டது 80 சதவிகித சென்னை மாநகரம்.!!! #மெட்ரோ #சென்னை.

ThisisKaruppu ‏@ThisisKaruppu - மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்தது தவறா? மு.க தொடங்கி வைத்தது என்பதற்காக அவரை அழைத்து அவர் கையால் துவக்கி வைக்கனுமா?

Sen ‏@Sen_Tamilan - இந்நேரம் #மெட்ரோ_ரயில் நிலைய படியோரம் பான்/குட்கா கடை போட்டிருக்கனுமே!

சிருஷ்டி ‏@i_am_sirushti - அம்மா காணொளி மூலம் மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கியதால் தொண்டர்கள் ரயிலின் முன்பாவது விழுந்து கும்பிடுவோம் என்று தண்டவாளத்தில் விழாமல் இருந்தால் சரி.

Thiru Navukkarasu ‏@TNavukkarasu - சென்னை ஏர்போர்ட் மேற்கூரை போட்டவன்தான் மெட்ரோ ரயில் பாலத்தையும் கட்டுனானாம்.

Sen ‏@Sen_Tamilan - இதுவும் மலிவு விலை #அம்மா ரயிலா இருக்கும்னு பார்த்தா இவ்ளோ காசு கேக்குராணுவ!

RAJU ‏@GOVINDARAJEN - என்னது மெட்ரோல வேர்கடலை, கடலமிட்டாய் விக்க மாட்டாங்களா.. அப்படிப்பட்ட ரயில் எங்களுக்கு தேவையில்லை.. டிக்கட்டு 40 ரூவாயாம்யா....

Troll Movies :D ‏@Iam_ajithist - மெட்ரோ ரயில்ல ஏசி இருக்கு, தான் இயங்கி கதவு இருக்கு எல்லாம் இருக்கு சரி. நெய் பிஸ்கட் விப்பாங்களா??? #metrorail.