Published : 09 Jul 2016 10:57 AM
Last Updated : 09 Jul 2016 10:57 AM

சிலை சிலையாம் காரணமாம் - 4: சிவபுரத்து நடராஜர்!

சிலைக் கடத் தல் மர்மங் களைச் சொல்லும்போது சிவபுரம் நடராஜர் கடத்தப்பட்ட கதையை எழுதாமல் விட முடி யாது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிவபுரத்தில் சிவகுரு நாத சுவாமி கோயில் உள்ளது 1951-ல் இந்த ஊரைச் சேர்ந்த அன்னமுத்து படையாச்சி என்பவர் தனது வயலை உழும்போது மண்ணுக்குள்ளிருந்து நடராஜர், சம்பந்தர், விநாயகர், சோமாஸ் கந்தர் மற்றும் இரண்டு அம்மன்கள் என மொத்தம் ஆறு ஐம்பொன் சிலைகளைக் கண்டெடுத்தார்.

வருவாய்த்துறையில் ஒப் படைக்கப்பட்ட இந்தச் சிலைகளை அப்போதிருந்த தஞ்சை ஆட்சியர் அங்குள்ள சிவகுருநாத சுவாமி திருக்கோயிலுக்கே வழங்கி விட்டார். இதையடுத்து, அந்தச் சிலைகளை சுத்தம் செய்வதற்காக கும்பகோணத்தைச் சேர்ந்த ராம சாமி என்ற ஸ்தபதியிடம் கொடுத் தது கோயில் நிர்வாகம்.

சிலைகளை கடத்திய ஸ்தபதி

அந்தச் சிலைகளின் நேர்த்தியில் மயங்கிய ஸ்தபதி, அவற்றை அப் படியே பதுக்கிவிட்டு அவைகளைப் போலவே ஆறு போலியான சிலை களை செய்து கோயில் நிர்வாகத் திடம் ஒப்படைத்தார். போலியும் கிட்டத்தட்ட அசல் போலவே அசத்தியதால் யாருக்கும் இதில் சந்தேகம் வரவில்லை. இந்த நிலையில் 1960-ல் இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்னை வரு கிறார். அப்போது, மும்பையின் கலைப்பொருள் டீலரான லான்ஸ் டேன் (Lance Dane) என்பவர் மகாராணி வரு கைக்காக ‘சிறப்பு மலர்’ ஒன்றை வெளியிடுகிறார்.

அந்த மலரில் சிவபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட (உண்மை யான) நடராஜர் சிலையின் புகைப்படம் பளிச்சிடுகிறது. அதைப் பார்த்துவிட்டு பிரிட்டிஷ் மியூசியத்தின் பொறுப்பாளர் டாக்டர் டக்ளஸ் பேரட் அடுத்த சில நாட்களில் சென்னை வருகிறார். சோழர் காலத் துச் சிலைகள் குறித்து புத்தகம் எழுத வேண்டும் என்பதுதான் அவ ரது இந்தியப் பயணத்தின் நோக்கம். அதற்காக ஓராண்டு காலம் தமிழகத் தில் தங்கி இருந்த பேரட், சிவபுரம் கோயிலுக்கும் சென்று அங்கிருந்த சிலைகளையும் பார்வையிட்டார்.

தமிழகத்தில் தனது தேடலை முடித்துக் கொண்டு மும்பை சென்ற பேரட், அங்கிருந்து இங்கிலாந்து திரும்பியதும் ‘சவுத் இண்டியன் பிரான்ஸ்’ என்ற தனது புத்தகத்தை வெளியிட்டார். சிலைகள் பற்றிய அரிய தகவல்களை மாத்திரமல்ல; அந்தப் புத்தகத்தின் வழியாக ஒரு அணுகுண்டையும் சேர்த்தே போட் டார் பேரட். ‘சிவபுரம் கோயிலில் இருக்கும் நடராஜர் சிலை டூப்ளி கேட். ஒரிஜினல் சிலை மும்பையில் இருக்கிறது’ என்பதுதான் பேரட் போட்ட குண்டு. இதன் பிறகு ஆறு மாதங்கள் ஓடிய பிறகுதான், ஒரிஜினல் நடராஜர் சிலையை மும்பை கலைப் பொருள் டீலர் லான்ஸ் டேன் மும்பைக்குக் கடத்தியது தெரிய வருகிறது.

போலீஸுக்கு இது தெரிந்து விசா ரணையைத் தொடங்குவதற்குள் ளாக நடராஜரை நியூயார்க்கைச் சேர்ந்த பென் ஹெல்லர் என்பவ ருக்கு கைமாற்றிவிட்டார் லான்ஸ் டேன். 1962-ல் அந்த சிலையை ஹெல் லரிடம் இருந்து அமெரிக்காவைச் சேர்ந்த நார்டன் சைமன் என்பவர் ஒரு மில்லியன் விலை கொடுத்து வாங்கி, தனது நார்டன் சைமன் ஆர்ட் ஃபவுண்டேஷன் மியூசியத் தில் வைத்தார். இந்தக் தகவல் களை எல்லாம் துப்பறிந்த இந்திய அரசு, லாஸ் ஏஞ்சலீஸ், நியூயார்க், லண்டன் ஆகிய மூன்று நீதிமன்றங் களில் சிவில் வழக்குத் தாக்கல் செய்தது.

வழக்கு நடந்து கொண்டிருந்த போதே நீதிமன்றத்துக்கு வெளியே சைமனுடன் ஒரு ஒப்பந்தம் போட் டது இந்திய தொல்லியல் துறை. நட ராஜர் சிலையை 10 ஆண்டு களுக்கு அமெரிக்காவில் உள்ள பொது மியூசியத்தில் வைத்திருந்து விட்டு அதன்பிறகு இந்தியாவிடம் திருப்பி ஒப்படைப்பது என்பதுதான் அந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் குறித்து 1975 நவம்பர் 10-ல் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு பதில் அளித்த அப்போதைய கல்வி அமைச் சர் நெடுஞ்செழியன், ‘தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் இப்படியொரு ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது’ என்று சொன்னார்.

ஒப்பந்தத்தின்படி, 10 ஆண்டுகள் அமெரிக்க மியூசியத்தில் அழகுப் பொருளாக இருந்த சிவபுரம் நடராஜர், 1987-ல் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டார். அதே சமயம், அந்த சிலையை கடத்தியதற்காக ஸ்தபதி ராமசாமி, குத்தாலம் திலகர், அவரது சகோதரர் தாஸ் மற்றும் லான்ஸ் டேன் ஆகியோர் இங்கே கைது செய்யப்பட்டார்கள். சிவபுரம் நடராஜர் தற்போது சென்னை கபா லீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சிலைகள் பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக இருக்கிறார்.

சிவபுரம் சிலைக் கடத்தல் தொடர் பான ஒப்பந்தத்தில் இன்னொரு விநோதமான சரத்தும் சேர்க்கப் பட்டது. ‘இந்தியாவுக்குச் சொந்த மான பழமையான கலைப் பொருட் கள் ஒரு வருடத்துக்கும் மேலாக இந்தியாவுக்கு வெளியில் இருந்து அது தொடர்பாக எந்த விதமான கேள்விகளும் இல்லாதபட்சத்தில் அவற்றை நார்டன் சைமன் மியூசியம் வாங்கிக்கொள்ள இந்தியா ஆட்சேபிக்காது’ என்பது தான் அந்த சரத்து.

மற்ற ஐந்து சிலைகள்...

இந்த சரத்தை தனக்குக் கிடைத்த கடவுச்சீட்டு போல வைத்துக் கொண்டு இந்தியாவுக்குச் சொந்த மான நூற்றுக்கும் மேற்பட்ட சிலை களையும் இருபத்தைந்துக்கும் மேற் பட்ட சோழர் காலத்து ஐம்பொன் சிலைகளையும் வாங்கிச் சேர்த்தார் சைமன். தொடர்ச்சியாக இந்தியா வின் பழமையான கலைப்பொருட் களையும் சிலைகளையும் வாங்கிக் குவித்த சைமனிடம்தான் சிவபுரத் தின் மற்ற ஐந்து சிலைகளும் போய்ச் சேர்ந்திருக்கின்றன என்பது பின்னால் வந்த செய்தி.

அது சரி.. சிவபுரம் நடராஜர் நாடு திரும்பிவிட்டார். அவரோடு கடத்தப்பட்ட மற்ற ஐந்து சிலை களின் கதி..?

- சிலைகள் பேசும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x