

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
அரசியல், சமூகச் செயல்பாடுகளுக்கு இடையே எப்போதும் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். அண்மையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியர் வெண்டி டோனிகர், இந்து நெறியைப் பற்றியும் இந்து மதத்தைப் பற்றியும் ஆங்கிலத்தில் ‘தி இந்தூஸ்: ஆன் ஆல்டர்னேட்டிவ் ஹிஸ்டரி’ புத்தகத்தை வெளியிட்டார். பெரும் புயலையே கிளப்பியது அந்தப் புத்தகம். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு இந்த புத்தகக் காட்சிக்கு வந்திருக்கிறது,
‘இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு' என்ற தலைப்பில். பார்த்த உடனே வாங்கிவிட்டேன். அதைத்தான் உடனே படிக்கப் போகிறேன்.
இந்த வருடப் புத்தகக் காட்சியில் நல்ல பல புத்தகங்கள் உள்ளன. இளைஞர்கள் அவற்றை வாங்க ஆர்வத்துடன் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இன்றைய இளைஞர்கள், பல தரப்பட்ட திசைகளில் தங்கள் வாசிப்பை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். திரைத் துறை, சின்னத் திரை, இணையம், தொலைக்காட்சி என்று பல்வேறு ஊடகங்கள் வழியாகத் தங்களைச் சுற்றி நடப்பவை பற்றி விழிப்புணர்வோடு இருகிறார்கள். அதிலும் இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் படிப்பவையே அதிகம், நவீனவசதிகளைப் பயன்படுத்தி வாசிப்பை இன்னும் கூர்மைப்படுத்த வேண்டும்.
கவனிக்க வேண்டிய புத்தகங்கள்:
பார்வையிழத்தலும் பார்த்தலும்
விலை ரூ.330
எஸ்.வி.ராஜதுரை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
கண்ணன் கதைகள்
விலை ரூ.130
திருப்பூர் கிருஷ்ணன்
திருப்பூர் குமரன் பதிப்பக வெளியீடு
காடாறு மாதம் நாடாறு மாதம்
விலை ரூ.90
விக்ரமாதித்யன்
நக்கீரன் பதிப்பக வெளியீடு
நான் ஏன் தலித்தும் அல்ல
விலை ரூ. 275
டி.தர்மராஜா
கிழக்கு பதிப்பக வெளியீடு
பிரம்ம ஸூத்ரம்
விலை ரூ.250
சுவாமி ஆசுதோஷானந்தர்
ராமகிருஷ்ண மடம் வெளியீடு