நெட்டிசன் நோட்ஸ்: பெருமாள் முருகன்- எழுத்துகள் உலர்வதில்லை!

நெட்டிசன் நோட்ஸ்: பெருமாள் முருகன்- எழுத்துகள் உலர்வதில்லை!
Updated on
2 min read

பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' நாவலுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவரின் நாவல், திருச்செங்கோடு பற்றியும் அங்குள்ள கோயில் மற்றும் இந்துப் பெண்களைப் பற்றியும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சர்ச்சை எழுந்தது. இதுகுறித்துத் தொடரப்பட்ட வழக்கில், 'மாதொருபாகன்' நாவலுக்கு தடையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை நெட்டிசன்கள் உலகம் எப்படிப் பார்க்கிறது?

படைப்பாளிகள் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது- மாதொருபாகன் நாவல் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மாதொருபாகன் தமிழ்ப் புதினத்திற்கு தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை வரவேற்கிறேன்..

பெருமாள் முருகனின் மாதொருபாகன் கொண்டாடத்தக்க நாவல் அல்ல. புறக்கணித்தக்க நாவலும் அல்ல. மிக அழகான விவரணைகள் உள்ள நாவல். கிராமம் பற்றியும், குடிக்க இடம்தேடி அலைந்து புதிய புதிய இடங்களைக் கண்டடையும் விவரிப்புகள் அருமை. மண் சார்ந்த எழுத்துகள் மனத்தை அள்ளும். இந்நாவலும் அப்படியே.

திருச்செங்கோட்டு மக்களை அந்த நாவல் வசைபாடவில்லை. அது ஒரு புனைவு மட்டுமே. புனைவுக்கும் ஒரு எல்லை உண்டு என்பது சரி. அப்படி அந்த எல்லை மீறப்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழி இதுவல்ல. எந்த ஒரு நூலும் தடை செய்யப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. மாதொருபாகன் தடை செய்யப்படவேண்டிய நூலும் இல்லை. எனவே இத்தீர்ப்பு சரியானதே.

பொழுது விடிந்தபோது கண்கள் சிவந்திருந்தன பின்னர் அதுவே நிரந்தரமாயின - பெருமாள்முருகன். இப்போதில்லை ஐயா. #மாதொருபாகன்

நெடு நாள் கழித்து வந்த ஒரு மகிழ்ச்சியான செய்தி பெருமாள் முருகன் வழக்குத் தீர்ப்புதான்.

பெருமாள்முருகன் மீதான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி. #மகிழ்ச்சி

படைப்பாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக போலீசுக்கு நிபுணர் குழு மூலம் அரசு பரிந்துரைகள் வழங்க வேண்டும். - சென்னை உயர்நீதிமன்றம்.

இது எழுத்தாளர்களுக்கு ஆதரவான தீர்ப்பே அன்றி இது பெருமாள் முருகனுக்கான தீர்ப்பல்ல. தனது எழுத்தை ஏற்கனவே பெருமாள் முருகன் வாபஸ் வாங்கிவிட்டார். எனவே, நான் சந்தோசப்படுவது எழுத்தாளர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பற்றியே. அதை பெருமாள் முருகனுக்கான நீதியாக நினைக்க என்னால் முடியாது. அது பெரும் வருத்தமே.

திருச்செங்கோடு சுற்றுவட்டாரத்தினை புனைவுகளுக்குள் கொண்டுவர மீண்டு'ம் எழுத வரவேண்டும். #பெருமாள்முருகன்

பெருமாள்முருகன் போன்ற சிறந்த எழுத்தாளர்களை வரவேற்போம்.

கேள்விக்குறியான கருத்துச் சுதந்திரம், கவலைக்கிடமாகி இன்று விடுதலை ஆகியிருக்கிறது. #பெருமாள் முருகன்.

நல்வாழ்த்துகள் பெருமாள்முருகன்! மீண்டும் நீங்கள் எழுதவரும் நலனுக்காக காத்திருக்கிறோம்.

பெண்கள் காரோட்ட தடை விதிக்க வேண்டும் என்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஆனால், அந்தப் பெண் காரை ஓட்டி பல பேரைக் கொன்றால் அவள் மேல் கிரிமினல் வழக்கு போடப்பட வேண்டும். பெருமாள் முருகன் நாவலுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஆனால், பெருமாள் முருகன் மேல் கிரிமினல் வழக்கு போடப்பட வேண்டும்.

இவ்வழக்கில் நம்மோடு இணைந்தும் தனியாகவும் வாதாடிய அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தெருவில் இறங்கிப்போராடிய அனைத்து அமைப்புகள், தனிநபர்கள், இலக்கிவாதிகள் அனைவருடைய கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி, இது நம்முடைய வெற்றி.

வெளியே வாருங்கள் தோழர் பெருமாள் முருகன். உங்கள் எழுத்துக்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

பெருமாள் முருகன் உயிர்த்தெழுந்தார்.

மை உலரலாம், எழுத்துகள் உலர்வதில்லை ஒருபோதும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in