

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருக்கும்போது பன்னீரை எப்படியெல்லாம் கலாய்ச்சீங்க?
ராத்திரியில் முதலமைச்சர் ஆனதும், இதுக்கு முன்னாடி முதலமைச்சர் ஆனப்போ கண்ணீரைத் துடைக்கிற படத்தையும், இப்போதைய புன்னகை படத்தையும் போட்டு எப்படியெல்லாம் கலாய்ச்சீங்க?
முதல்வர் ஆனதும் போயஸ் தோட்டத்துக்குப் போனதை எப்படில்லாம் கலாய்ச்சீங்க?
அப்புறம், மேம்பாலத்துக்கு ஒப்புதல் கொடுத்ததும் எப்படி ஓஹோன்னு பாராட்டினீங்க?
தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்தப்போ தமிழகத்துக்கு ஒரு முதல்வர் இருக்காரான்னு நீங்க கேள்வி கேக்கலையா?
ஜல்லிக்கட்டுப் போராட்ட நேரத்துல நீங்க திட்டாத திட்டா?
டெல்லியில் பிரதமரைச் சந்திக்கப் போயிட்டு வந்தப்போ பண்ணாத கிண்டலா?
ஆனா, அவசரச் சட்டம் கொண்டுவந்ததும் ஆஹான்னு பாராட்டினீங்க.
போலீஸ் தடியடி நடத்தியதும் ‘ஆ.. பன்னீர் உண்மை முகம் காட்டிட்டார்’னு கொதிக்கலையா?
இப்போ... மனசாட்சிப்படிப் பேசிட்டார், வீரமா எதிர்த்து நிற்கிறார்னு சந்தோஷப்படறீங்க. எரியற கொள்ளியில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளின்னு பாக்கறீங்கன்னு புரியுது. மன்னார்குடி கும்பல் வந்துடக் கூடாதுங்கிற ஒரே புள்ளிதான் எல்லாரையும் பன்னீருக்கு ஆதரவா இருக்கச் செய்யுது, இல்லையா?
தாராளமா செய்ங்க. வேண்டாம்னு சொல்லலே.
ஆனா, இதே பன்னீர்தான் சசிகலாவை அதிமுக பொதுச் செயலராக்க முன்மொழிந்தார் இல்லையா?
அதிமுக கூட்டத்துக்கே வராத சசிகலாவை வீட்டுக்கே போய்ச் சந்திச்சு, பொதுச் செயலராக்கற தீர்மானத்தைக் கொடுத்தார், இல்லையா?
முந்தாநேத்து சசிகலா முதல்வர் ஆவதற்காக ராஜினாமா கடிதமும் கொடுத்தார் இல்லையா?
ஜெயலலிதா சமாதியில பேசும்போதுகூட, அம்மாவை ஏகமா புகழ்ந்தார். அதே அம்மாதான் சசிகலாவைப் பக்கத்துலயே வச்சிருந்தார்ங்கிறது ஏன் எல்லாருக்கும் மறந்துபோச்சா என்ன? அவ்வளவு ஏன்.... சின்னம்மா சின்னம்மான்னு ஏக மரியாதையுடன்தானே பேசியிருக்கார்.
மனசாட்சி, வீரம்கிறதெல்லாம் ஏதோ அப்பப்போ ‘செலக்டிவ்’வா தலைகாட்டிட்டுப் போற விஷயம் இல்லை. அது எப்பவும் கூடவே இருக்க வேண்டிய விஷயம். மெரினா பீச்சில் பன்னீரின் சோக முக நாடகத்தைப் பாராட்டி மகிழ்வதற்கு முன்னால் இந்த விஷயத்தையும் ஞாபகம் வச்சுக்குங்க. அவ்ளோதான்.
மத்தபடி ஒரு விஷயத்துல சந்தோஷம். இப்படியே அவரை இன்னும் உசுப்பிவிட்டா, அந்த 75 நாள் மர்மங்களும், இன்னபிற சதிகளும் வெளியே தெரிஞ்சா நல்லது.
தெரியுமா.. இல்லே இதுவும் அதிகாரத்துக்கான மோதலில் சமரசத்தில் முடியுமா?! பார்ப்போம்!