கார்ட்டூன் மேதை ஆர்.கே.லக்ஷ்மன்

கார்ட்டூன் மேதை ஆர்.கே.லக்ஷ்மன்

Published on

ஆர்.கே.லக்ஷ்மன் எனும் கார்ட்டூன் மேதையின் பிறந்தநாள் இன்று (24 அக்டோபர் ). இவரின் சகோதரர் தான் பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயன். முதலில் 'தி ஹிந்து'வில் வரைந்த இவர் பின் 'டைம்ஸ் ஆப் இந்தியா'வில் அறுபதாண்டு காலமாக 'யூ செட் இட்' (You Said it ) என்கிற தலைப்பில் காமன்மேன் (Common Man) என்கிற கதாபாத்திரத்தின் மூலம் இவர் அடித்த எள்ளல்கள் அபாரம்.

'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் ஒரு அஞ்சல் தலையே அந்த 'காமன்மேன்' நினைவாக வெளியிடப்பட்டது. ஆர்.கே. நாராயனின் 'மால்குடி நாட்கள்'தொலைக்காட்சி தொடருக்கு இவரே ஓவியம் வரைந்தார்.

எளிய ஆனால் ஆழ்ந்த சமூகப்பார்வைக்கு நல்ல எடுத்துகாட்டு இவரின் கார்டூன்கள். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் முத்திரையும் இவர் வரைந்ததே! இவரை ஒட்டி ஒரு நகைச்சுவை தொடரே ஹிந்தியில் வந்தது .

இவரின் கார்ட்டூன்கள் நூல்களாக வந்து நல்ல விற்பனை ஆயின. தற்பொழுது தொன்னூறு வயதை தாண்டி விட்ட அவர் சில வருடங்களுக்கு முன் ஸ்ட்ரோக் வந்து சீர்பெற்று அவ்வளவாக பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.

அவரின் தூரிகை தெளித்த வெளிச்சத்தில் எத்தனையோ பேர் இப்பொழுது மின்னுகிறார்கள். இப்பொழுதும் அவர் உருவாக்கிய ’காமன்மேன்‘ சிலை நிற்கிறது மும்பையில்.

அவரின் தைரியம் பலரால் சுவீகரிக்க பட்டு இருக்கிறது.அதுதானே வெற்றி !

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in