Published : 01 Sep 2016 12:59 PM
Last Updated : 01 Sep 2016 12:59 PM

நெட்டிசன்ஸ் டாக்கில் உங்கள் கருத்து: இளைஞர்களின் மனதை கெடுக்கிறதா திரைப்படங்கள்?

ஒருதலைக் காதலால் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூலை 24-ம் தேதி காலையில் ஐடி பெண் ஊழியர் சுவாதி (24) வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு கரூரில் கல்லூரிக்குள் நுழைந்து சோனாலி என்ற மாணவியை, அதே கல்லூரியில் படித்த உதயகுமார் என்ற முன்னாள் மாணவர் கட்டையால் தாக்கி கொலை செய்தார். ஒருதலைக் காதலை ஏற்க சோனாலி மறுத்ததால் ஆத்திரமடைந்த உதயகுமார் இவ்வாறு செய்துள்ளார்.

இதே ஒருதலைக் காதலால் தூத்துக்குடியில் நேற்று தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த ஆசிரியை பிரான்சினா வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்து நடந்த இந்த 3 கொலைகளும் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.

ஒருதலைக் காதலால் நிகழ்த்தப்படும் இந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் சமகால தமிழ் சினிமா ஏற்படுத்தும் தாக்கமும் அடங்கியிருப்பாதாக விவாதங்கள் எழுகின்றன?

இது எந்த அளவுக்கு ஏற்கத்தக்கது அல்லது மறுக்கத்தக்கது? இளைஞர்களின் மனதை உண்மையிலேயே கெடுக்கிறதா திரைப்படங்கள்?

உங்கள் பார்வையை செல்ஃபி வீடியோ வடிவில் 'தி இந்து' இணையதளத்துடன் பகிருங்கள்.

நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துகளை 3 நிமிடங்களுக்கு மிகாமல் வீடியோவாக எடுத்து tamilthehindu@gmail.com(கூகுள் டிரைவ் மூலமாக) அல்லது 9597958840 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பலாம்.

உங்கள் பெயர், ஊர், தொழில் ஆகிய குறிப்புகளைச் சொல்லிவிட்டு, உங்கள் கருத்துகளை வீடியோவில் பதிவு செய்யுங்கள். உங்கள் வீடியோ பதிவை செப்டம்பர் 2 - வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குள் அனுப்பலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் வீடியோக்கள் கீழ்க்கண்டது போல் 'நெட்டிசன்ஸ் டாக்' தொகுப்பாக யூடியூபில் வெளியிடப்படும்.