நான் என்னென்ன வாங்கினேன்?

நான் என்னென்ன வாங்கினேன்?
Updated on
1 min read

த.செந்தில்குமார், காவல் துணை ஆணையர்.

ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘அடித்தள மக்கள் வரலாறு’, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘இந்திய வானம்’, கண்மணி குணசேகரன் எழுதிய ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட புத்தகங்களை வாங்கினேன்.

1994 முதல் புத்தகக்காட்சிக்கு வருகிறேன். தற்போது என்னிடம் சுமார் 17,000 புத்தகங்கள் உள்ளன.

தலைப்பு வாரியாகப் பிரித்து, எனது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் போத்திரமங்கலத்தில் ஒரு நூலகத்தை வைத்துள்ளேன். இன்றைய இளைஞர்கள் சமூக வலைதளங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புத்தகங்களுக்குக் கொடுக்காதது வருத்தமளிக்கிறது.

அரசியல், நீதிநெறி இலக்கியங்கள், வாழ்க்கை சார்ந்த புத்தகங்களை இளைஞர்கள் படிக்க வேண்டும்.

காவல் துறையின் பணி இலகுவானதல்ல. பல்வேறு நெருக்கடிகளில் பணியாற்றுவோம். அவற்றுக்கிடையே புத்தகம் வாசிப்பது என் மனதை இலகுவாக மாற்றும். புத்தகங்கள் புத்துணர்வு தரும். பல்வேறுதரப்பட்ட விஷயங்களை ஆழமாக நம்மை அறிந்துகொள்ள வைப்பவை புத்தகங்கள்தான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in