Last Updated : 13 Sep, 2016 04:50 PM

 

Published : 13 Sep 2016 04:50 PM
Last Updated : 13 Sep 2016 04:50 PM

யூடியூப் பகிர்வு: தரங்கிரி- ஆசியாவின் மிகப் பெரிய வாழை சந்தை!

வாழை- உலகத்தில் அதிகம் உற்பத்தி செய்யும் விவசாயப்பொருட்களில் ஐந்தாம் இடத்தைப் பிடித்திருக்கும் பழம். இந்தியாவில் இதற்கான சில்லறை வணிக மதிப்பு மிக அதிகம். ஆசியாவின் மிகப்பெரிய வாழை சந்தை தரங்கிரியில்தான் இருக்கிறது.

தரங்கிரி எங்கிருக்கிறது என்கிறீர்களா? அஸ்ஸாம் மாநிலத்தின் கோல்பாரா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. வருடந்தோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வாழை சீசன் தொடங்கி விடுகிறது. சுமார் 50 லாரிகள் முழுதும் ஏற்றப்பட்ட வாழைப்பழங்கள் விற்பனையாகின்றன.

வாழை வளர்ப்பவர்கள் தொடங்கி, விற்பவர்கள் வரை சுமார் 15 ஆயிரம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். வாழைப்பழங்கள் பூடான், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் மாம்பழத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது முக்கிய பழப் பயிராக விளங்குவது வாழை. தரங்கிரியின் மாத வருமானம் எவ்வளவு தெரியுமா? ரூபாய் நான்கு கோடி.

வாழை சந்தை தொடர்பான காணொலியைக் காண