Published : 28 Jan 2014 01:33 PM
Last Updated : 28 Jan 2014 01:33 PM

ட்வீட்டாளர்களை ஜோக்காளர்களாக்கிய ராகுல் பேட்டி!

மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, 'டைம்ஸ் நெள' சேனலுக்கு அளித்த பேட்டி, அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோ இல்லையோ... இணையவாசிகளின் கற்பனைத் திறனுக்கு ஊக்கியாக இருந்திருக்கிறது.

குறிப்பாக, சமூக வலைத்தளமான ட்விட்டரில், ட்வீட்டாளர்கள் ஜோக்காளர்களாகி, நிமிடத்துக்கு நூற்றுக்கணக்கான ட்வீட்களால், ராகுலை ட்ரெண்டிங்கில் வலம் வரச் செய்தனர்.

ட்விட்டரின் டாப் 10 ட்ரெண்ட்டிங்கில் முதல் 8 இடங்களை ராகுலே ஆக்கிரமித்திருந்தார். #RahulSpeaksToArnab | #ArnabVsRahul | #FranklySpeaking | #ComedyNightsWithPappu | Pappu | RTI | Women Empowerment முதலான ஹேஷ்டேகுகள் ஏற்றத்தில் இருந்தன.

ராகுல் பேட்டியைத் தொடர்ந்து வந்த எண்ணற்ற ட்வீட்களில் மிகவும் பிரபலமானவற்றில் சில இங்கே:

நேற்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில், ராகுல் காந்தி,

அது இது எது நிகழ்ச்சியின் மாத்தி யோசி சுற்றை விளையாடிக்கொண்டிருந்தார்.

@Chingakutty

அர்னாப்: நம் தேசத்தை ஏலியன்கள் படையெடுத்தால் என்ன செய்யலாம்?

ராகுல்: காங்கிரஸ்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமல் படுத்தியது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

@TheUnRealTimesவாழ்க்கை உங்களுக்கு ராகுல் என்ற பெயரைத் தந்தால்,

அதோடு டிராவிட்டை இணைத்துக் கொள்ளுங்கள்

காந்தியை அல்ல

@dhiry2kஇன்று, நாம் அனைவரும் ஞானவான்கள் ஆனோம்.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் நம்மிடம் பதில் உள்ளது.

"பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், தகவல் அறியும் உரிமை சட்டம்"

@Viramஇந்த ராகுல் காந்தி பேட்டியில் கேள்விகள் இருந்தன,

பதில்களும் இருந்தன

ஆனால் இரண்டுக்குமான தொடர்பைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

@bhogleharshaராகுல் காந்திட்ட உங்க பேரு என்னன்னு கேட்டா கூட 'empowering the women'ன்னு பதில் சொல்லுவாரு போல! :>

@BalaramanLஆர்.டி.ஐ-இன் விரிவாக்கத்தைக் கேட்காமல் இருந்து,

ராகுல் காந்தியை தர்மசங்கடப்படுத்தாமல் விட்டதற்கு

அர்னாப் கோஸ்வாமிக்கு பத்மபூஷண் விருது கொடுக்க வேண்டும்

@arnab_chakஇந்த பேட்டி என் கல்லூரி பிராக்டிகல் தேர்வுகளை ஞாபகப்படுத்துகிறது.

'நீ என்ன கேள்வி கேட்டாலும் எனக்குத் தெரிந்த பதிலைத் தான் சொல்லுவேன்'

@it_saurabhஒவ்வொரு முறையும் காங்கிரஸ், நரேந்திர மோடிக்கு தோண்டும் குழியில்

ராகுல் காந்தி குதிக்கிறார்

@rishibagreeராகுல் காந்தி அவர்களே, 2+2 எவ்வளவு?

அர்னாப், பெண்கள் கையில் அதிகாரம் செல்ல வேண்டும். அரசியலை மாற்ற வேண்டும். அடுத்த கேள்வி?

@maheshmurthyஅடிப்படை பிரச்சினை என்னவென்றால்,

ராகுலுக்கு முதல் கேள்வி புரியும்போது

அர்னாப் 3-வது கேள்வியை கேட்டு முடிக்கிறார்.

@revieweroநம் நாட்டில் உள்ள பெண்கள் ஜனத்தொகையை விட அதிக முறை

'பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்' என்கிற வார்த்தைகளை ராகுல் காந்தி இப்போது சொல்லிவிட்டார்

@i_Psychoஇது இரு வேறு வித்தியாசமான நிகழ்ச்சிகளைப் பார்ப்பது போல் உள்ளது.

அர்னாபின் கேள்விகள், ராகுலின் பதில்கள்.

@gauravkapurமோடிக்கு, பேச விருப்பமில்லை

ராகுலுக்கு, பேசத் தெரியவில்லை

கேஜ்ரிவால், பேச்சை நிறுத்தவில்லை

@daddy_sanஅர்னாப்: கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா?

ராகுல்: கோழிக்கு அதிகாரம் அளிக்க வேண்டும், முட்டைக்கு தகவல் அறியும் சட்டத்தைத் தரவேண்டும்.

@chandana

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x