

காலம்காலமாக நாம் பயன்படுத்திவரும் தமிழ்ச் சொற்கள், வழக்குகள் காலப்போக்கில் மாறிவருவதையும், காலமாற்றத்தில் வார்த்தைகளின் அர்த்தம் மாறுபடுவதையும் பார்த்துவருகிறோம்.
இந்நூலில், நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் இருக்கும் பிழைகளைச் சுட்டிக்காட்டும் பேராசிரியர் நன்னன், பிழையின்றி எழுதுவது எப்படி என்று வழிகாட்டுகிறார்.
காலத்தின் தேவைக்கேற்ப புதிய சொல்லாக்கம் சிறந்த வழியாக இருக்கும் என்றும், அதற்கு முன்னர் தமிழில் உள்ள, வழக்கற்றுப்போன அரிய சொற்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
அன்றாடம் பயன்படுத்தும் சொற்களுக்கான சரியான அர்த்தத்தைச் சொல்வதுடன், வாக்கியங்களில் அச்சொல்லைப் பயன்படுத்துவது எப்படி என்றும் சொல்கிறார். பிழைகளே இல்லாத பதிப்பாக, இரண்டு தொகுதிகளாக வெளியாகியிருக்கும் இந்நூல், நம் மொழியின் தரம் அறிய உதவும் உரைகல் என்று சொல்லலாம்.
புலவர் நன்னன்
ஏகம் பதிப்பகம்,
அஞ்சல் பெட்டி எண்: 2964,
3, பிள்ளையார் கோயில் தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை.
தொடர்புக்கு: 044-28529194