

பெண்கள் மீதான வன்முறை எப்போது தொடங்கப்பட்டிருக்கும்? எந்த ஆண் மகனால்(!) ஆரம்பிக்கப்பட்டிருக்கும்? யாருக்கும் பதில் தெரியாது.
பெண்களின் மீது கட்டவிழ்க்கப்படும் அடக்குமுறையும், வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. சமூகத்தின் எல்லா விதமான அடுக்குகளுக்கும் இதே நிலைதான்.
உயர் தட்டு, மத்தியதரம், ஏழ்மை நிலை என மூன்று நிலைகளில் உள்ள பெண்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாகத் துன்புறுத்தல்களை வெவ்வேறு வழிகளில் எதிர்கொள்கிறார்கள். மார்பகங்களை எப்படி நீக்குவது என்று துன்புறுத்தலுக்கு ஆளான பெண் ஒருவர் கூகுளில் தேடுகிறார்.
உச்சகட்டமாக மன அழுத்தம் தாங்காமல், ஒரு பெண் தற்கொலை முடிவுக்கே செல்கிறார். தொடர்ந்து என்ன நடக்கிறது? காணுங்கள் இந்தக் காணொலியை.
</p><p xmlns="">வசனங்களே இல்லாமல் காட்சிகளின் வழியாக வலியைக் கடத்தி இருக்கிறார் இயக்குநர் மோகன். நடந்ததை குடும்பத்தில் சொல்லத் தயங்கி, தனக்குள்ளே உழன்று, குற்றவாளியை சுதந்திரமாக உலவ அனுமதிக்கக் கூடாது; உற்ற துணை இருந்தால் எந்த துன்பமும் தீரும் என்று சொல்லாமல் சொல்கிறது '13+'.</p>