

கிருஷ்ணா, இல்லத்தரசி
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவண்ணாமலை, வீட்டில் எல்லோரும் புத்தகப் புழு... எனக்கும் புத்தகத்தின் மேல் காதல். வார இதழ்களில் வரும் குட்டிக் கதைகளைப் படிக்க ஆரம்பித்த நான் வாசிப்பின் மேல் உள்ள ஆர்வம் அதிகரிக்க, நாவல்களை தேடித் தேடிப் படிக்கும் அளவு வளர்ந்துள்ளேன்.
ஊரிலிருந்து புத்தகத் திருவிழாவைப் பார்ப்பதற்காகவே இரண்டு நாள் சென்னை வந்துள்ளேன். நான் தேடி கிடைத்த புத்தகங்கள்... கி.ராஜ நாராயணனின் ‘கோபல்ல கிராமம்,' ஜெயமோகனின் ‘காடு', ‘விஷ்ணுபுரம்', ‘சிவசங்கரி சிறுகதைகள்' இன்று நான் எடுத்தவை. அதிகம் அறியப்படாத எழுத்தாளர்களின் படைப்புகளையும் படிக்க விரும்புகிறேன்.
என் பையனுக்கும் இப்போதே வாசிப்புப் பழக்கத்தை ஆரம்பித்து விட்டேன்... வாசிப்பைப் போன்று சிறந்தது வேறு இல்லை அல்லவா?