

பத்தி எழுத்தில் தனி பாணியைக் கொண்டுவந்தவர் சுஜாதா. கணையாழியின் கடைசிப் பக்கங்களில் அவர் எழுதாத விஷயமே இல்லை.
இலக்கியப் படைப்புகளின் அறிமுகம், எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள், திரைப்படங்கள், தொடர்பான குறிப்புகள், அனுபவக் குறிப்புகள், சென்ற நூற்றாண்டின் தமிழ்ப் பத்திரிகைகள் என்று என்ன இல்லை சுஜாதா எழுத்தில்? கணினி தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்த சுஜாதா, தமிழில் தட்டச்சு செய்வது பற்றி 1988-ல் எழுதியிருக்கிறார்.
கம்ப்யூட்டர் உலகில் புரட்சியை உருவாக்கியவர் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய குறிப்பை அவர் எழுதியது 1989-ல். தவறவிடக் கூடாத புத்தகம்!